Column Left

Vettri

Breaking News

தமிழ்நாடு "மில்லட் பவுண்டேசன்" நிறுவனத்தின் தாபகர் டாக்டர் எஸ்.சுந்தர் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்கு விஜயம்- நலிவுற்ற பெண்களை சுயதொழில் முயற்சியாளர்களாக மாற்றும் கருத்தரங்கிலும் பங்கேற்பு.




தமிழ்நாடு "மில்லட் பவுண்டேசன்" நிறுவனத்தின் தாபகர் டாக்டர் எஸ்.சுந்தர் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்கு விஜயம்- நலிவுற்ற பெண்களை சுயதொழில் முயற்சியாளர்களாக மாற்றும் கருத்தரங்கிலும் பங்கேற்பு. அக்கரைப்பற்று இந்து இளைஞர் மன்றத்தின் ஏற்பாட்டில் இந்தியா, தமிழ்நாட்டை சேர்ந்த "மில்லட் பவுண்டேசன் நிறுவனத்தின் தாபகர் மற்றும் சந்தைப்படுத்தல் அதிகாரியுமான டாக்டர் எஸ்.சுந்தர் (08) அக்கரைப்பற்று ஆலையடிவேம்புக்கு விஜயமொன்றை மேற்கொண்டார். ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் பிரதேசசெயலாளர் ஆர் திரவியராஜ். தலைமையில் இடம்பெற்ற நலிவுற்ற பெண்களை சுயதொழில் முயற்சியாளர்களாக மாற்றும் கருத்தரங்கில் கலந்து கொண்டதுடன் பெண்களுக்கான சுயதொழில் பயிற்சி மற்றும் சுயதொழில் மூலம் வலுவூட்டி அவர்களை சிறந்த முயற்சியாளர்களாக மாற்றுவது தொடர்பில் தெளிவூட்டினார். இலங்கை -மலேசியா நட்புறவின் ஏற்பாட்டில் மலேசியா நாட்டில் அண்மையில் இடம்பெற்ற சிறுதானிய உற்பத்தியினை ஊக்குவிக்கும் "உலக தமிழர் வர்த்தக மாநாட்டில்" அக்கரைப்பற்று இந்து இளைஞர் மன்றத்தின் சார்பில் மன்ற இணைப்பாளர் அசோகா ஆறுமுகம் கலந்து கொண்டார். இதன் பயனாக இலங்கையில் 5000 நலிவுற்ற பெண்களின் வாழ்வாதாரத்தை வலுவூட்டும் நோக்கில் அரசாங்க பிரதிநிதிகளுடன் பல்வேறுகட்ட சந்திப்புக்களும் பேச்சுவார்த்தைகளும் இடம் பெற்று வரும் நிலையில் அண்மையில் தமிழ்நாட்டைச்சேர்ந்த உற்பத்தியாளர்களில் ஒரு குழுவினர் இலங்கையில் பல்வேறு இடங்களுக்கும் வர்த்தக ரீதியிலான தரிசிப்புக்களை மேற்கொண்டு அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு இந்து இளைஞர் மன்றத்திற்கும் வருகைதந்து சிறுதானிய உற்பத்தி மற்றும் நலிவுற்ற பெண்களுக்கான சுயதொழில் முயற்ச்சி தொடர்பில் கலந்துரையாடியிருந்தனர். இதன் இரண்டாம் கட்டமாக தமிழ்நாட்டைச்சேர்ந்த டாக்டர் எஸ் .சுந்தர் அவர்களின் இலங்கைக்கான விஜயம் அமைந்திருந்ததுடன் பவ்வேறுபட்ட அரச அரசசார்பற்ற பிரதிநிதிகளுடனும் 6,7ம் திகதிகளில் சந்திப்புக்களை மேற்கொண்டிருந்தார். இதன்போதே அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு பிரதேசத்திற்கு வருகைதந்த அவர் சுயதொழில் முயற்சி தொடர்பிலும் இதன் மூலம் பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவது தொடர்பிலும் அக்கரைப்பற்று இந்து இளைஞர்மன்றம் மற்றும் ஆலையடிவேம்பு பிரதேசசெயலகமும் இணைந்து நடாத்திய நலிவுற்ற பெண்களுக்கான சுயதொழில் முயற்ச்சி கருத்தரங்கிலும் கலந்து கொண்டு பெண்களுக்கு விளக்கமளித்ததுடன் சுயதொழிலுக்கான இயந்திரங்களை இலங்கைக்கு தருவிப்பது தொடர்பாகவும் விளக்கமளித்தார் . இந்நிகழ்வில் அக்கரைப்பற்று இந்து இளைஞர்மன்ற தலைவர் த. கைலாயபிள்ளை.அதன் இணைப்பாளர் ஆறுமுகம் அசோகா மற்றும் இலங்கை இந்திய பிரமுகர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கதாகும் . செல்வி வினாயகமூர்த்தி

No comments