ரன் விமன வீடமைப்பு திட்டத்தின் கீழான வீடுகளுக்கான அடிக்கல் நடும் நிகழ்வு
வி.சுகிர்தகுமார்
சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஊடாக வருமானம் குறைந்த மக்களுக்காக 10 இலட்சம் அரச நிதியுடன் மக்கள் பங்களிப்பையும் உள்ளடக்கி நிர்மாணித்துக்கொடுக்கப்படும் ரன் விமன வீடமைப்பு திட்டத்தின் கீழான வீடுகளுக்கான அடிக்கல் நடும் நிகழ்வு ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் (29) இடம்பெற்றது.
ஆலையடிவேம்பு சமுர்த்தி தலைமையக முகாமையாளர் கே.நேசராஜா தலைமையில் இடம்பெற்ற வீடுகளுக்கான அடிக்கல் நடும் நிகழ்வில் ஆலையடிவேம்;பு பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ் பிரதம அதிதியாக கலந்து கொண்டு அடிக்கல்லினை நாட்டி வைத்ததுடன் வீடமைப்பிற்கான முதற்கட்ட காசோலையினையும் வழங்கி வைத்தார்.
நிகழ்வில் முகாமைத்துவ பணிப்பாளர் சிவப்பிரியா சுதாகரன் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் வினிதா சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்பின் தலைவிகள் என பலர் கலந்து கொண்டனர்.


No comments