விநாயகபுரம் கனிஷ்ர வித்தியாலயத்தில் தரம் 01 மாணவர்கள் வரவேற்பு விழா மிக சிறப்பாக இடம்பெற்றது....
ஜே.கே.யதுர்ஷன்
தம்பிலுவில்...
அம்பாறை மாவட்டம் திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட விநாயகபுரம் கனிஷ்ர வித்தியாலயத்தில் புதிதாக தரம் 01 வகுப்புக்கு மாணவர்களை வரவேற்கும் நிகழ்வானது இன்றைய இன்றை தினம் பாடசாலை அதிபர் திரு.தம்பிராசா தவராசா அவர்களின் தலைமையில் இடம்பெற்றது....
குறித்த நிகழ்வில் புதிய மாணவர்கள் மற்றும் அதிதிகள் வேண்ற் வாத்தி குழுவினரின் வாத்திய மரியாதையுடன் மலர் மாலைகள் அணிவித்து பாடசாலைக்கு அழைத்து வரப்பட்டனர் ..
அதனை தொடர்ந்து மங்களவிளக்கேற்றல் மற்றும் மாணவர்களின் மழலைகுரலில் வரவேற்பு உரை மற்றும் சிறார்களின் கலைநிகழ்வுகள் என்பன இடம்பெற்றதுடன் மாணர்களுக்கு பரிசில்களும் அனுரனையாளர்களினால் வழங்கிவைக்கப்பட்டதுடன் அதிதிகளின் உரையும் இடம்பெற்றது..







No comments