Column Left

Vettri

Breaking News

ஏ.ஆர். மன்சூர் தொழிநுட்ப அறை திறப்பு மற்றும் ஸ்மார்ட் போர்ட் வழங்கும் சிறப்பு விழா




ஏ.ஆர். மன்சூர் தொழிநுட்ப அறை திறப்பு மற்றும் ஸ்மார்ட் போர்ட் வழங்கும் சிறப்பு விழா பாறுக் ஷிஹான் கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட கல்முனை இஸ்லாமாபாத் மகா வித்தியாலயத்தின் கல்வி மேம்பாட்டை நோக்கமாகக் கொண்டு, கல்வி விசேட வேலைத்திட்டத்தின் கீழ் “ஸ்மார்ட் போர்ட்” கையளிக்கும் சிறப்பு விழா செவ்வாய்க்கிழமை (06) பாடசாலை அதிபர் ஏ.ஜீ.எம். றிஷாத் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில், முன்னாள் கல்முனை மாநகர சபை பிரதி முதல்வரும், ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொருளாளரும், ரஹ்மத் பவுண்டேசனின் ஸ்தாபகத் தலைவருமான ரஹ்மத் மன்சூர் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். மேலும், கல்முனை கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளரும், சாய்ந்தமருது கோட்டக் கல்விப் பணிப்பாளருமான அஸ்மா அப்துல் மலீக் கௌரவ அதிதியாக பங்கேற்று நிகழ்வைச் சிறப்பித்தார்.ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் உற்சாகமாக கலந்து கொண்ட இந்நிகழ்வில், ஏ.ஆர். மன்சூர் தொழிநுட்ப அறை உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டதுடன், பாடசாலைக்கான ஸ்மார்ட் போர்ட் பிரதம அதிதியான ரஹ்மத் மன்சூரினால் கையளிக்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் சுமார் ஒரு மில்லியன் ரூபாய் பெறுமதியான ஸ்மார்ட் டீவி வழங்குவதற்கான ஏற்பாடுகளை ரஹ்மத் மன்சூர் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். மாணவர்களின் எதிர்கால கல்விப் பயணத்திற்கு புதிய திசையை வழங்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாக இவ்விழா அமைந்திருந்தது. மேலும், பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றதுடன், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக் குழு, இஸ்லாமாபாத் விளையாட்டுக் கழகம், இஸ்லாமாபாத் அக்கரை குழு மற்றும் இஸ்லாமாபாத் ஜனாஸா நலன்புரி அமைப்பு ஆகியவற்றின் சார்பில் பிரதம அதிதிக்கு நினைவுச் சின்னம் வழங்கப்பட்டதுடன், பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டமை நிகழ்வின் சிறப்பம்சமாக அமைந்தது. இந்நிகழ்வில் பாடசாலை பிரதி அதிபர், உதவி அதிபர், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள், பிரதேச முக்கியஸ்தர்கள், ரஹ்மத் பவுண்டேசனின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

No comments