தேசிய டெங்கு ஒழிப்பு வாரத்திற்கான விசேட கலந்துரையாடல்
தேசிய டெங்கு ஒழிப்பு வாரத்திற்கான விசேட கலந்துரையாடல்
பாறுக் ஷிஹான்
பொது நிருவாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சின் ஊடாக, சுகாதார, கல்வி மற்றும் பாதுகாப்பு படை ஆகியவற்றுடன் உள்ளுராட்சி நிறுவனங்களின் பங்களிப்புடன் அரச துறை, தனியார் துறை மற்றும் பொது மக்களுடன் இணைந்து, 2026 ஜனவரி 07 முதல் 09 வரை நாடளாவிய ரீதியில் டெங்கு ஒழிப்புக்கான மூன்று நாள் தேசிய வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
இதற்கமைய, சம்மாந்துறை பிரதேச சபையினால் இத்திட்டம் தொடர்பான செயற்திட்டங்களை திட்டமிடும் நோக்கில் ஏற்பாடு செய்த கலந்துரையாடல் சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளர் ஐ.எல்.எம்.மாஹிர் தலைமையில் பிரதேச சபை கேட்போர் கூடத்தில் செவ்வாய்க்கிழமை (7) இடம்பெற்றது.
இக்கலந்துரையாடலில் சம்மாந்துறை பிரதேச சபையின் செயலாளர் யூ.எல்.அப்துல் மஜீட், சம்மாந்துறை பிரதேச சபையின் உறுப்பினர்கள், பொலிஸ், கல்வி, சுகாதார திணைக்கள அதிகாரிகள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டார்.
டெங்கு ஒழிப்புக்கான செயல்முறைகள், பொது மக்களின் பங்கேற்பு மற்றும் துறை ஒருங்கிணைப்புகள் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டது.
No comments