Column Left

Vettri

Breaking News

விபுலானந்தாவில் புதிய விழுதுகளின் புகுமுக விழா




இன்று விபுலானந்தாவில் புதிய விழுதுகளின் புகுமுக விழா ( காரைதீவு சகா) காரைதீவு விபுலானந்த மொன்டிசோரி முன்பள்ளி பாடசாலையில் புதிய மாணவர்களின் "புதிய விழுகளின் புகுமுக விழா" இன்று (23) வியாழக்கிழமை பாடசாலையில் நடைபெற்றது . பெற்றோர் சார்பில் திருமதி பிரதீபா தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், புதியமாணவர்களை பழைய மாணவர்கள் மாலை அணிவித்து வரவேற்றார்கள். பிரதம அதிதியாக ஓய்வு நிலை உதவி கல்விப் பணிப்பாளர் வித்தகர் விபுலமாமணி வி.ரி. சகாதேவராஜா கலந்து சிறப்பித்தார் . கௌரவ அதிதிகளாக ஆசிரியைகளான நிலந்தினி ரம்யா ஆகியோரும் கலந்து கொண்டார்கள். பெற்றோர் சார்பில் ஆசிரியர் பி .கேதீஸின் சிறப்புரை வழங்க டாக்டர் பிரசன்னா நன்றியுரையாற்றினார் .

No comments