Column Left

Vettri

Breaking News

நிந்தவூரில் இந்து அறநெறிப்பாடசாலை ஆசிரியர்கள் வாக்குறுதி எடுக்கும் நிகழ்வு




நிந்தவூரில் இந்து அறநெறிப்பாடசாலை ஆசிரியர்கள் வாக்குறுதி எடுக்கும் நிகழ்வு ( வி.ரி.சகாதேவராஜா) இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் ய. அநிருத்தனின் வழிகாட்டலுக்கு அமைவாக நிந்தவூர் பிரதேச செயலகப்பிரிவிற்கு உட்பட்ட அறநெறிப்பாடசாலை ஆசிரியர்களின் வாக்குறுதி எடுக்கும் நிகழ்வு நிந்தவூர் பிரதேச செயலகத்தில் பிரதேசசெயலாளர் சட்டத்தரணி ஏ.எம் அப்துல் லத்தீப் தலமையில் நேற்று இடம்பெற்றது. இந்நிகழ்வின் ஒருங்கிணைப்பினை மாவட்ட இந்துகலாசார உத்தியோகத்தர் கு. ஜெயராஜி மேற்கொண்டதுடன் ஏற்பாடுகளை பிரதேச இந்துகலாசார உத்தியோகத்தர் திருமதி சுஜிவனி பாஸ்கரன் மேற்கொண்டார். இந்நிகழ்வில் நிந்தவூர் பிரதேச செயலக உதவிச்செயலாளர் ரி. ஜெசான் மற்றும், கலாசார உத்தியோகத்தர்கள், பிரிவுகளுக்கான கிளைத்தலைவர்கள் மற்றும் அறநெறிபாடசாலைகளின் ஆசிரியர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

No comments