Column Left

Vettri

Breaking News

பாதுகாப்பு உத்தியோகத்தரின் சடலம் உறவினர்களிடம் கையளிப்பு




பாதுகாப்பு உத்தியோகத்தரின் சடலம் உறவினர்களிடம் கையளிப்பு பாறுக் ஷிஹான் தனது வீட்டு சாமி அறையில் தூக்கிட்டு மரணமடைந்தவரின் சடலம் மரண விசாரணையின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது. கடந்த புதன்கிழமை(21) அன்று அம்பாறை மாவட்டம் காரைதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் உள்ள சாமி அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் 24 வயது மதிக்கத்தக்க நபர் சடலமாக மீட்கப்பட்டிருந்தார். இவ்வாறு உயிரிழந்தவரின் மரணம் தொடர்பில் சம்மாந்துறை நீதிமன்ற நீதிவான் நூர்டீன் முஹம்மட் சர்ஜுன் பணிப்புரைக்கமைய திடீர் மரண விசாரணை அதிகாரி ஏ.எச்.அல்-ஜவாஹிர் முன்னிலையில் மரண விசாரணை மேற்கொள்ளப்பட்டு தூக்கினால் மூச்சு திணரல் ஏற்பட்டு மரணம் சம்பவித்துள்ளதாக குறிப்பிட்டு சடலம் உறவினர்களிடம் மாலை கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இவ்வாறு மரணமடைந்தவர் தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் பாதுகாப்பு உத்தியோகத்தராக கடமையாற்றி வந்ததுடன் காரைதீவு -12 பிரதான வீதியை சேர்ந்த ரவிந்திரன் மிதுசன் என்பவர் ஆவார்.காதல் விவகாரம் காரணமாக தற்கொலை முயற்சியில் ஈடுபட்டிருக்கலாம் என்ற கோணத்தில் ஆரம்ப கட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது. அத்துடன் மேற்குறித்த சம்பவம் தொடர்பில் காரைதீவு பொலிஸார் புலன் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

No comments