ஐக்கிய அரபு அமீரகத்தின் (UAE) விமானப்படைக்கு சொந்தமான, உதவிப் பொருட்களை ஏற்றி வந்த மூன்றாவது சரக்கு விமானம்!!
இலங்கையில் ஏற்பட்டுள்ள பேரழிவு நிலைமை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்குடன் ஐக்கிய அரபு அமீரகத்தின் (UAE) விமானப்படைக்கு சொந்தமான, உதவிப் பொருட்களை ஏற்றி வந்த மூன்றாவது சரக்கு விமானம் நேற்று (டிசம்பர் 02) இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.
பேரழிவு சூழ்நிலைகளைச் சமாளிக்க உதவும் பல விசேட வாகனங்கள் இந்த விமானத்தில் உள்ளடக்கப்பட்டிருந்தன.
விமானத்தை வரவேற்பதற்காக, இலங்கையில் உள்ள ஐக்கிய அரபு அமீரகத்தின் தூதுவர் சோலிட் நஸ்ஸார் அல் அமெரி (Cholild Nassar Al Ameeri)
இலங்கை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் அதிகாரிகள்
முப்படை அதிகாரிகளின் குழுவினர் விமான நிலையத்திற்கு வந்திருந்தனர்.
No comments