Column Left

Vettri

Breaking News

மாபெரும் மகாநாட்டுடன் முடிவடைந்த “Hope of Youth” செயல் திட்டம்  




மாபெரும் மகாநாட்டுடன் முடிவடைந்த “Hope of Youth” செயல் திட்டம் பாறுக் ஷிஹான் அம்பாறை மாவட்டத்தில் இளைஞர்களை மேம்படுத்துதல் என்ற Empower செயல் திட்டத்தின் இறுதி மகாநாடு வியாழக்கிழமை(18) சாய்ந்தமருது றோயல் பவா மண்டபத்தில் வெற்றிகரமாக நடைபெற்றது. இந்த திட்டம் GCERF மற்றும் Helvetas Sri Lanaka போன்றவற்றின் நிதியுதவியுடன் GAFSO நிறுவனத்தினால் கடந்த மூன்று ஆண்டுகளாக செயல்படுத்தப்பட்ட ஒரு செயல்திட்டமாகும். GAFSO நிறுவனத்தின் பணிப்பாளர் ஏ.ஜே. காமில் இம்டாட் தலைமையில் இடம்பெற்ற இம்மகாநாட்டிற்கு பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக அபேவிக்ரம கலந்து கொண்டு சிறப்பித்தார். மேலும் இந்த நிகழ்வில் கௌரவ அதிதிகளாக, அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ். ஜெகராஜன், பிரதேச செயலகங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி பிரதேச செயலாளர்கள் மற்றும் அரச உத்தியோத்தர்கள், சம்மாந்துறை பிரதேச செயலக சமூக சேவை உத்தியோகத்தர் அஹமட் சபீர், மாவட்ட தேசிய ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர், இளைஞர் பிரதிநிதிகள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் உட்பட பல்வேறு பங்குதாரர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்வுக்கு அம்பாறை மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் சுமார் 180 இளைஞர் யுவதிகள் கலந்து கொண்டமை சிறப்பம்சமாகும். மேலும் இந்நிகழ்வில் GAFSO வினால் அமுல்படுத்தப்பட்ட கடந்த மூன்று வருட செயல்திட்டங்கள் முன்வைக்கப்பட்டதோடு இளைஞர்கள் தங்களது திறமைகளையும் இங்கே வெளிக்கொண்டு வந்தனர். Hope of Youth” செயல் திட்டம் மற்றும் மகாநாட்டில் கலந்து கொண்டவர்களுக்கு அதிதிகளினால் சான்றிதழ் வழங்கி வைக்கப்பட்டதுடன் பிரதம அதிதி மற்றும் கெளரவ அதிதிகளும் இங்கு உரையாற்றினர். அத்தோடு வன்முறையற்ற ஆளுமைமிக்க இளைஞர் சமூகத்தை உருவாக்கும் தொனிப்பொருளில் நாடகம் மற்றும் உரைகள் இடம்பெற்றதுடன் இது எல்லோரினதும் பெரும் பாராட்டையும் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

No comments