வெள்ளத்தால் வவுனியாவிலும் சேதமடைந்த ரயில் பாதைகள்; திருத்தப் பணிகளை பார்வையிட்ட பிரதி அமைச்சர்
வவுனியாவில் சேதமடைந்த ரயில் பாதைகளை இன்றைய தினம் நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் ஏரங்க குணவர்த்தன பார்வையிட்டிருந்தார்.
நொச்சிமோட்டை பகுதியில் ஏற்பட்ட கடும் வெள்ளம் காரணமாக அப்பகுதியில் இருந்த ரயில் பாதை கடுமையாக சேதமடைந்தது.
தற்போது குறித்த பாதையை சொப்பனிடும் பணிகள் ராணுவத்தினரின் உதவியுடன் ரயில்வே திணைக்களம் மேற்கொண்டு வருகின்றது.
இந்நிலையில் சுமார் 125 மீட்டர் நீளமான சேதமடைந்த வீதியை செப்பனிடும் பணிகளை இன்றைய தினம் நகர அபிவிருத்தி அமைச்சர் ஏரங்க குணவர்தன நேரில் சென்று பார்வையிட்டிருந்தார்.
இதன்போது அங்கு பணியாற்றும் இராணுவத்தினர் மற்றும் ரயில்வே திணைக்கள ஊழியர்களுடனும் கலந்துரையாடல்களில் ஈடுபட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
No comments