Column Left

Vettri

Breaking News

ரூ.25 ஆயிரம் நிவாரணத் தொகை வீட்டுக்கா? தனிநபருக்கா? யாழ். மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் முறையிட்ட மாணவன்





 அரசாங்கத்தினால் வழங்கப்படுகின்ற 25 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு வீட்டுக்கானதா அல்லது நபருக்கானதா என்ற விளக்கத்தை எழுத்து மூலமாக வழங்குமாறு யாழ். சண்டிலிப்பாய் பிரதேச செயலாளரை  இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய அலுவலகம் கோரியுள்ளது.

இரண்டு நாட்களுக்குள் எழுத்துமூலம் பதில் வழங்குமாறு காலக்கெடு குறித்து கடிதம் அனுப்பியுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

நேற்றையனம் புதன்கிழமை மாணவன் ஒருவர் அரசாங்கத்தினால் வழங்கப்படுகின்ற 25000 ரூபாய் கொடுப்பனவுக்கு வெள்ளத்தில் சிக்குண்ட தமது வீடு புறக்கணிக்கப்பட்டு விட்டதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாட்டை பதிவு செய்திருந்தார்.

சிறுவனின்  முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டதாவது,

சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்திற்குற்ப்பட்ட புதிய வீடமைப்புத் திட்டம் கல்லுண்டாயில் வசிக்கும் யோகநாதன் ராயித் ஆகிய எனக்கு தந்தை இல்லை. தாயின் பாராமரிப்பிலும் பாதுகாப்பிலும் வார்ந்து வருகின்றேன். எனது வயது 16. புனித பத்திரிசியார் கல்லூரியில் படித்து வருகிறேன்.

எனது தாயார் குடும்பச் சுமை காரணமாக தற்காலிகமாக கொழும்பிற்க்கு வேலைக்கு சென்று 3 மாதகாலமாகின்றது.

ஆகையால் எனது பாதுகாப்பு கருதி என்னை குருநகரில் வசிக்கும் பெரிய தாயாருடன் விட்டுச் சென்றுள்ளார்.

எனது அம்மம்மாவும் அங்களோடு இருப்பதால் அவருடைய அடிப்படை தேவைகளையும் பூர்த்தி செய்யவேண்டிய கட்டாயத்தில் எனது தாயார் உள்ளதால் தாயாரே முழு குடும்ப சுமையையும் தாங்கி வருகிறார். 

எனது வீடு கல்லூண்டாயில் இருப்பதால் நான் அங்கு ஒவ்வொரு ஞாயிறும் சென்று வருவதோடு அங்கு மத ஆராதனை ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் நடப்பதுண்டு.

 ஆனால் இரு வாரமாக நான் அங்கு செல்லவில்லை. வெள்ளம் வந்ததால் வீட்டின் மின் இணைப்புக்களில் தண்ணீர் சென்றுள்ளது. இதனை உறவினர் சென்று பர்வையிட்டு வந்து கூறினார்.

அதனால் அரசாங்கம் வழங்கும் வெள்ள அனர்த்த நிதியினை எனது தாயார் கிராம சேவையாளரிடம் தரும்படிஇ பதிவினை மேற்கொள்ளும் படியும் கேட்டார். ஆனால் அவர் மறுத்து விட்டார்.

அங்கு இல்லாத குடும்பங்களுக்கு கொடுத்துள்ளார். ஆனால் எனது தாயாரை மட்டும் புறக்காணித்து ஊழல் செய்கிறார்.

குறித்த விடயம் தொடர்பில் மேலதிகாரிகளிடமும் எனது தாயார் கதைத்து சாதகமான முடிவுகள் கிடைக்காத காரணத்தினால் அரச அதிகாரிகளிடமிருந்து எங்களுக்கு உரிய நீதியைப் பெற்றுத் தருமாறு கேட்டுக்கொள்கிறேன் என குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த முறைப்பாட்டை ஏற்றுக்கொண்ட இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய அலுவலகம், 

"அரசாங்கத்தின் 25000 ரூபா நிவாரணத் தொகை வீட்டுக்கானதா அல்லது தனிநபருக்கானதா" என்ற விளக்கத்தை இரு நாட்களுக்குள் எழுத்து மூலம் ஆணைக்குழுவிற்கு  அனுப்பி வைக்குமாறு சண்டிப்பாய் பிரதேச செயலாளரை கேட்டுக் கொண்டுள்ளது.

No comments