Column Left

Vettri

Breaking News

தலசீமியா அற்ற ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்குவோம்! கல்முனையில் விழிப்புணர்வு கருத்தரங்கு




தலசீமியா அற்ற ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்குவோம்! கல்முனையில் விழிப்புணர்வு கருத்தரங்கு பாறுக் ஷிஹான் தலசீமியா நோய்த்தாக்கத்திலிருந்து எதிர்கால சந்ததியினரை பாதுகாக்கும் நோக்கில், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையினால் ஏற்பாடு செய்யப்பட்ட விழிப்புணர்வு கருத்தரங்கு நேற்று (18) பிராந்திய பணிமனையின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸடீன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வை, பிராந்திய தொற்றா நோய் தடுப்பு பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் எம்.ஐ.எம்.எஸ். இர்ஷாட் ஒருங்கிணைத்திருந்தார். இக்கருத்தரங்கில், பிராந்திய தர முகாமைத்துவ பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் எம்.ஏ.எம். ஹில்மி வளவாளராகக் கலந்துகொண்டு, தலசீமியா நோயின் தன்மை, அதன் தீவிரம், சமூகத்தில் ஏற்படுத்தும் பாதிப்புகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விரிவாக விளக்கமளித்தார். குறிப்பாக திருமணத்திற்கு முன் தலசீமியா பரிசோதனையின் அவசியம் தொடர்பாகவும் அவர் வலியுறுத்தினார். மேலும், இந்நிகழ்வில் பிரதி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஏ.பி. மசூத், பிராந்திய சுற்றுச்சூழல், தொழில் சுகாதாரம் மற்றும் உணவுப் பாதுகாப்பு பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் ஏ.எஸ்.எம். பௌசாத், பிராந்திய பொதுச் சுகாதார பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் ஏ.எல்.எம். அஜ்வத் உள்ளிட்டவர்களும் கலந்துகொண்டனர். தலசீமியா அற்ற ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்குவதற்கான விழிப்புணர்வு முயற்சிகளின் ஒரு பகுதியாக இக் கருத்தரங்கு முக்கியத்துவம் பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments