Column Left

Vettri

Breaking News

வர்த்தக நிறுவன உரிமையாளர்களுக்கான நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையின் விழிப்புணர்வு நிகழ்ச்சி




வர்த்தக நிறுவன உரிமையாளர்களுக்கான நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையின் விழிப்புணர்வு நிகழ்ச்சி பாறுக் ஷிஹான் அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பிரதேச செயலக ஏற்பாட்டில் வர்த்தக நிறுவன உரிமையாளர்களுக்கான நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையின் விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று (19) மாலை சாய்ந்தமருது பிரதேச செயலக பிரதான கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது. வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் அம்பாறை மாவட்ட செயலக நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையினால் சாய்ந்தமருது பிரதேச எல்லைக்குட்பட்ட வியாபார நிறுவனங்களின் உரிமையாளர்களுக்கான நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையில் விசேஷட விழிப்புணர்வு செயலமர்வு சாய்ந்தமருது பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் எம்.என்.எம் றம்சான் தலைமையில் நடைபெற்றது. சாய்ந்தமருது பிரதேச செயலகத்தின் பிரதம முகாமைத்துவ உத்தியோகத்தர் ஏ.சீ. முஹம்மட் வழிகாட்டலில் இவ் நிகழ்வு இடம்பெற்ற இவ் விழிப்புணர்வு செயலமர்வுக்கு பிரதான வளவாளராக நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையின் புலனாய்வு உத்தியோகத்தர் முஹம்மட் ஸாஜித் ஸமான் அத்துடன் மற்றும் அம்பாறை மாவட்ட நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபையின் புலனாய்வு உத்தியோகத்தர்களான எம்.எச்.எம் றிபாஜ்,எ.பி.எம் றிப்சாத்,ஆகியோர் கலந்து கொண்டதுடன் இதன் போது நூகர்வோர் உரிமைகள், பொறுப்புகள்,சட்டங்கள்,பாதுகாப்பு மற்றும் பொருட்கள் சேவைகளின் போது கவனிக்க வேண்டிய முக்கியமான விடயங்கள் மற்றும் தற்போதைய சந்தையில் பொருட்களின் அரசாங்க கட்டுப்பாட்டு விலை மற்றும் அதிகார சபையின் சட்ட திட்டங்கள் சம்பந்தமான வியாபாரிகளுக்கு விளக்கக்காட்சி ஊடாக தெளிவுபடுத்தப்பட்டது.

No comments

Subscribe Us