நாட்டில் ஏற்பட்ட பாரிய அனர்த்தத்தின் மத்தியிலும் சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை !!
இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 22 இலட்சத்து 19 ஆயிரத்து 209 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
சீரற்ற வானிலை காரணமாக நாட்டில் ஏற்பட்ட பாரிய அனர்த்தத்தின் மத்தியிலும் சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தருவதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
அதன்படி, இந்தியாவிலிருந்தே அதிகளவான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.
இதுவரை இந்தியாவிலிருந்து 501,097 சுற்றுலாப் பயணிகளும்
ஜெர்மனியிலிருந்து 139,355 சுற்றுலாப் பயணிகளும்,
ரஷ்யாவிலிருந்து 171,099 சுற்றுலாப் பயணிகளும்,
ஐக்கிய இராச்சியத்திலிருந்து 200,939 சுற்றுலாப் பயணிகளும்,
அவுஸ்திரேலியாவிலிருந்து 101,012 சுற்றுலாப் பயணிகளும்,
சீனாவிலிருந்து 127,553 சுற்றுலாப் பயணிகளும்,
பிரான்ஸிலிருந்து 104,802 சுற்றுலாப் பயணிகளும் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.
அத்துடன், டிசம்பர் மாதத்தின் முதல் 17 நாட்களில் 115,616 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.

No comments