Column Left

Vettri

Breaking News

பண்டிகைக் காலத்தில் மத வழிபாட்டுத் தலங்களுக்காக விசேட பாதுகாப்புத் திட்டம்!!




 வரவிருக்கும் பண்டிகைக் காலத்தில் மத வழிபாட்டுத் தலங்களுக்காக விசேட பாதுகாப்புத் திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு. வுட்லர் (F.U. Wuetler) தெரிவித்துள்ளார்.

இதற்காக மேலதிக பொலிஸ் உத்தியோகத்தர்கள் பலர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி, எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் மத வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பல்வேறு மதச் செயற்பாடுகளில் ஈடுபடும் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக பொலிஸார் நடவடிக்கை எடுப்பார்கள் என்றும், இதற்காக சிவில் உடையில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் புலனாய்வுப் பிரிவு உத்தியோகத்தர்களை ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.


No comments