Column Left

Vettri

Breaking News

மின்சாரம் தாக்கி மரணமடைந்தவரின் சடலம் உறவினர்களிடம் கையளிப்பு




மின்சாரம் தாக்கி மரணமடைந்தவரின் சடலம் உறவினர்களிடம் கையளிப்பு பாறுக் ஷிஹான் மின்சாரம் தாக்கி மரணமடைந்தவரின் சடலம் மரண விசாரணையின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது. கடந்த திங்கட்கிழமை(15) அன்று அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதியில் அமைந்துள்ள பொழுதுபோக்கிற்காக கட்டப்பட்ட இடமொன்றில் வைத்து மின்சாரம் தாக்கிய நிலையில் 68 வயது மதிக்கத்தக்க நபர் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்திருந்தார். இவ்வாறு உயிரிழந்தவரின் மரணம் தொடர்பில் கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே. இப்னு அசாரின் வழிகாட்டலில் சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் வேண்டுகோளிற்கிணங்க திடீர் மரண விசாரணை அதிகாரி ஏ.எச்.அல்-ஜவாஹிர் முன்னிலையில் மரண விசாரணை மேற்கொள்ளப்பட்டு மின்சாரம் தாக்கியதனால் ஏற்பட்ட அதிர்ச்சியில் மரணம் சம்பவித்துள்ளதாக குறிப்பிட்டு சடலம் உறவினர்களிடம் இரவு கையளிக்கப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. சம்மாந்துறை பகுதியில் உள்ள செந்நெல் கிராமத்தில் அமைந்துள்ள உயிரிழந்த நபரின் பொழுது போக்கிற்காக கட்டப்பட்ட இடத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. வாடகை அடிப்படையில் வழங்கப்படும் இவ்விடத்தினை சிலர் முன்பதிவு செய்திரந்தனர்.இதனடிப்படையில் முன்பதிவு ஒன்றினை கருத்திற்கொண்டு அவ்விடத்தில் உள்ள சீரற்றிருந்த மின்சாரத்தை சீர் செய்வதற்காக மரணமடைந்த நபர் அங்கு சென்றிருந்தார். இதன் போது ஏணி ஒன்றினை பயன்படுத்தி மின்குமிழ் ஒன்றினை பொருத்தும் நடவடிக்கையில் ஈடுபட்ட வேளை அவருக்கு ஏணியில் மின்சாரம் திடீரென பாய்ந்து தாக்கியுள்ளதை அங்கிருந்த சிசிரிவி காணொளியில் தெளிவாக தெரிவதாக ஆரம்ப கட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.உடனடியாக அருகில் உள்ள வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளதாக எமது செய்தியாளர் பாறுக் ஷிஹானிடம் தெரிவித்தனர். இவ்வாறு மின்சாரம் தாக்கிய மரணமடைந்தவர் 68 வயதுடைய முன்னாள் ஓய்வு பெற்ற மின்சார சபை ஊழியரான எல்.ரி.ஏ ரசீட் ஆவார்.

No comments