Column Left

Vettri

Breaking News

புயல் அனர்த்தத்தில் சிக்கிய மக்களுக்கு வர்த்தக சங்க அணுசரனையுடன் பொலிஸாரின் உதவி




புயல் அனர்த்தத்தில் சிக்கிய மக்களுக்கு வர்த்தக சங்க அணுசரனையுடன் பொலிஸாரின் உதவி பாறுக் ஷிஹான் நாட்டில் ஏற்பட்ட 'டித்வா' புயல் அனர்த்தத்தில் சிக்குண்டு நிர்க்கதியாகியுள்ள மக்களுக்கான நிவாரண உதவியாக அம்பாறை மாவட்டத்தில் உள்ள வர்த்தக சங்கங்களின் அணுசரனையுடன் இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் ஊடாக முதற்கட்டமாக அத்தியவசிய உலர் உணவுப் பொருட்கள் இன்று வழங்கி வைக்கப்பட்டுள்ளது. குறித்த உலருணவுப் பொருட்களை அம்பாறை மாவட்டத்தில் உள்ள கல்முனை மருதமுனை சவளக்கடை சாய்ந்தமருது சம்மாந்துறை வர்த்தக சங்க பிரதிநிதிகள் பங்குபற்றலுடன் பெரிய நீலாவணை பொலிஸ் நிலையத்திற்கு அருகில் உள்ள கல்முனை மாநகர சபையின் கலாச்சார மண்டபத்தில் இன்று(6) நடைபெற்ற நிகழ்வில் உத்தியோகபூர்வமாக அம்பாறை மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் சுஜித் வெதமுல்லவிடம் கையளிக்கப்பட்டது. இதன் போது குறித்த நிகழ்வில் அம்பாறை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த பண்டார கஸ்தூரியாராச்சி கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே. இப்னு அசார் உள்ளிட்ட உயர் பொலிஸ் அதிகாரிகளும் கல்முனை பெரியநீலாவணை சவளக்கடை சாய்ந்தமருது சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளும் கலந்து கொண்டிருந்தனர். மேற்குறித்த திட்டத்தில் உள்வாங்கப்பட்ட உலர் உணவுப் பெறுமதி ரூபா 5000 க்கும் மேல் பெறுமதியுடையது என்பதுடன் 400 க்கும் மேற்பட்ட இவ்வலருணவுப் பொதிகளின் பெறுமதி சுமார் ரூபா 20 லட்சத்திற்கும் அதிகமாகும்.கிழக்குப் பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி வருண ஜயசுந்தரவின் ஆலோசனைக்கமைய இத்திட்டம் முன்னெடுக்கப்படுவதாகவும் இவ்வுலருணவுப் பொருட்கள் தற்போது திருகோணமலை கந்தளாய் பொலிஸ் அத்தியட்சகர் பிரிவில் தற்போதைய அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட சிங்கள தமிழ் முஸ்லீம் என பேதமின்றி வழங்கி வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த முதற்கட்டமாக அத்தியவசிய உலர் உணவுப் பொருட்கள் நிவாரண சேவைகளை ஒருங்கிணைக்க வர்த்தக சமூகத்தின் ஆலோசனைக்கமைய சிறப்பு குழு ஒன்று அண்மையில் கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே. இப்னு அசாரின் நேரடி வழிகாட்டலில் உருவாக்கப்பட்டிருந்தது.குறித்த குழுவில் கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.ஏ.எல்.லசந்த களுஆராச்சி சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டபிள்யூ.ஏ.என்.நிசாந்த பிரதிப்குமார சவளக்கடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வை.சி.இந்திரஜீத் டி சில்வா சாய்ந்தமருது பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எஸ்.எல். சம்சுதீன் பெரிய நீலாவணை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பி.கஜேந்திரன் கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தின் பிரதான பொலிஸ் பரிசோதகரும் பொது மக்கள் பாதுகாப்புக் குழுவின் பொறுப்பதிகாரியுமான ஏ.எல்.ஏ .வாஹிட் உள்ளடங்கலாக கல்முனை வர்த்தக சங்கம் ,கல்முனை மாநகர பொதுச் சந்தை வர்த்தக சங்கம், மருதமுனை வர்த்தக சங்கம், சாய்ந்தமருது மாளிகைக்காடு வர்த்தகர் சங்கம் , சம்மாந்தறை வர்த்தக சங்கம், சவளக்கடை வர்த்தக சங்க பிரதிநிதிகளும் உள்ளடங்கி இருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

No comments