கல்முனை ரஹ்மத் பவுண்டேசனினால் யங் பேர்ட்ஸ் ஜனாஸா நலன்புரி அமைப்பிற்கு மின்தோற்றி வழங்கி வைப்பு!
கல்முனை ரஹ்மத் பவுண்டேசனினால் யங் பேர்ட்ஸ் ஜனாஸா நலன்புரி அமைப்பிற்கு மின்தோற்றி வழங்கி வைப்பு!
ஏ.எஸ்.எம்.அர்ஹம்
நிருபர்
கல்முனை பிரதேசத்தில் நிலவும் கடுமையான குடிநீர் மற்றும் மின்சார தடை காரணமாக மக்கள் எதிர்நோக்கும் சவால்களை குறைக்கும் நோக்கில், சமூக நலனுக்காக முன்னின்று செயல்பட்டு வரும் கல்முனை ரஹ்மத் பவுண்டேசன், தனது உதவியை வழங்கியது.
யங் பேர்ட்ஸ் ஜனாஸா நலன்புரி அமைப்பினரின் கோரிக்கைக்கு இணங்க, உடனடி முடிவெடுத்து மின்தோற்றியை (Generator) கல்முனை ரஹ்மத் பவுண்டேசன் ஸ்தாபக தலைவரும் கல்முனை முன்னாள் மாநகர சபை பிரதி முதல்வருமான ரஹ்மத் மன்சூர் வழங்கி வைத்தார்.
இந்த உத்தியோகபூர்வ வழங்கி வைப்பு நிகழ்வு இன்று (04) கல்முனை யங் பேர்ட்ஸ் ஜனாஸா நலன்புரி அமைப்பின் காரியாலயத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் ரஹ்மத் பவுண்டேசன் உறுப்பினர்கள், யங் பேர்ட்ஸ் ஜனாஸா நலன்புரி அமைப்பின் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.
இந்த உதவி, தற்போதைய சவாலான சூழ்நிலையில் மக்களுக்கு பெரும் நம்பிக்கையையும் நிவாரணத்தையும் வழங்கும் செயல் எனப் பாராட்டப்படுகிறது.
No comments