அரண் ஒன்றியத்தால் மீனவர் சங்க உறுப்பினர்களின் பிள்ளைகளிற்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டது.
அரண் ஒன்றியத்தால் மீனவர் சங்க உறுப்பினர்களின் பிள்ளைகளிற்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டது.
அரண் ஒன்றியத்தால் மட்டுப்படுத்தப்பட்ட காரைதீவு விநாயகர் மீனவ கூட்டுறவுச் சங்க உறுப்பினர்களின் பிள்ளைகளில் கல்வி கற்கும் மாணவர்களிற்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு சங்கத்தின் தலைவர் சி.துரைரெத்தினம் தலைமையில் இடம்பெற்றது.
இவ் நிகழ்விற்கு அரண் ஒன்றியத்தின் தலைவர் திரு.வெ.சிவகுமார் உட்பட ஏனைய உறுப்பினர்கள் கலந்து கொண்டதோடு, கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தரான திருமதி.குமுதினி ஜெகதீசன் அவர்களும் சிறப்பு அதிதியாக கலந்து கொண்டார்.
இந் நிகழ்வில் கற்றல் உபகரணங்கள் பெற்றுக்கொள்ளும் மாணவர்கள் உட்பட மீனவர் சங்க நிர்வாக சபை உறுப்பினர்களோடு ஏனைய உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்..
மேற்படி உதவியினை எமது சங்கத்திற்கு வழங்கிய அரண் ஒன்றியத்திற்கு நன்றிகளை எமது சங்கம் சார்பாக தெரிவித்து கொள்கின்றோம்.
மேலும் அரண் ஒன்றியத்தின் செயற்பாடுகள் விரிவுபடுத்தப்பட்டு சமூக, பொருளாதார, கல்வி, கலாச்சார விடயங்களிலும் எமது சமூகத்தை உள்ளடக்கி பல உதவிகளை வழங்க வேண்டும் என கேட்டுக் கொள்கின்றோம்.
அத்துடன் மேற்படி நிகழ்வு இடம்பெறுவதற்கு வீரபத்திர சுவாமி அறநெறிப் பாடசாலை கட்டத்தினை வழங்கிய திருவாளர் மணிமாறன் சேர் அவர்களிற்கும் இவ்விடத்தில் நன்றியினை தெரிவித்து கொள்கின்றோம்.
ர.சுஜீதன்
No comments