இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கிடைக்கப்பெற்ற நிவாரணப்பொருட்கள் அம்பாரை மாவட்டத்தில் -மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக அபேவிக்கிரம
இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கிடைக்கப்பெற்ற நிவாரணப்பொருட்கள் அம்பாரை மாவட்டத்தில் -மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக அபேவிக்கிரம
ஆலையடிவேம்பு நிருபர்
வி.சுகிர்தகுமார்
இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கிடைக்கப்பெற்ற நிவாரணப்பொருட்கள் அம்பாரை மாவட்டத்தில் வெள்ள அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட 14 பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் உடன் அனுப்பி வைக்கப்பட்டதாக அம்பாரை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக அபேவிக்கிரம தெரிவித்தார்.
ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் நிவாரணப்பொருட்களை கையளிக்க இன்று (10)வருகை தந்த அவர் பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜிடம் பொருட்களை கையளித்த பின்னர் ஊடகங்களுக்கும் கருத்து தெரிவித்தார்.
இதன் அடிப்படையில் 5100 பால்மா பைக்கற்றுக்கள் 50 கிலோ நிறையுடைய 2000 சீனி மூடைகள் 50 கிலோ நிறையுடைய 2000 பருப்பு மூடைகள் மற்றும் சாரிகள் உள்ளிட்ட பொருட்களும் கிடைக்கப்பெற்றுள்ளதாக அவர் கூறினார்.
குறித்த நிவாரணப்பொருட்களை பிரதேச செயலகங்களுக்கு அனுப்பி வைக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவிற்கும் நிவாரணப்பொருட்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
அம்பாரை மாவட்டத்தில் உள்ள 14 பிரதேச செயலாளர் பிரிவுகளில் தெகியத்தகண்டிய பிரதேச செயலாளர் பிரிவு அதிகம் பாதிக்கப்பட்டதாகவும் மாவட்டத்தில் மொத்தமாக 8 பேர் மரணமடைந்துள்ளதாகவும் 111 வீடுகள் முழமையாகவும் 502 வீடுகள் பகுதியளவிலும் சேதம் அடைந்துள்ளதாகவும் கூறிய அவர் பெருமளவான விவசாய செய்கையும் சோளன் செய்கையும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
No comments