காரைதீவு சிவன் ஆலயத்தில் சிறப்பாக நடைபெற்ற நவக்கிரக ஆலய மகா கும்பாபிஷேகம் !
காரைதீவு சிவன் ஆலயத்தில் சிறப்பாக நடைபெற்ற நவக்கிரக ஆலய மகா கும்பாபிஷேகம் !
( வி.ரி.சகாதேவராஜா)
காரைதீவு ஸ்ரீ ஆதி சிவன் ஆலயத்தில் புதிதாக நிறுவப்பட்ட நவக்கிரக பரிவார கோயிலின் மகா கும்பாபிஷேகம் இன்று (7) ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக நடைபெற்றது.
அதற்கான கிரிகைகள் நேற்று முன்தினம் 5 ஆம் திகதி ஆரம்பமாகியது.
நேற்று (6) சனிக்கிழமை காலை 7:00 மணி முதல் மாலை 5:00வரை எண்ணைய்க் காப்பு சாத்தும் நிகழ்வு நடைபெற்றது.
இன்று (7) ஞாயிற்றுக்கிழமை நவக்கிரக கோயிலுக்கான கும்பாபிசேகம் சுப வேளையில் நடைபெற்றது.
No comments