வெள்ளத்தால் துரைவந்தியமேடு கிராமம் முற்றாக துண்டிப்பு? கிட்டங்கி தாம்போதியில் வெள்ளம் பீறிட்டு பாய்கிறது!
( வி.ரி.சகாதேவராஜா)
கிழக்கில் குறிப்பாக அம்பாறை மாவட்டத்தில் பொழிந்து வரும் அடைமழை காரணமாக பல்வேறு பகுதிகளிலும் வெள்ள நிலைமை ஏற்பட்டுள்ளது.
கல்முனை நாவிதன்வெளி பெருநிலப்பரப்பை இணைக்கின்ற கிட்டங்கி தாம்போதியில் வெள்ளம் பீறிட்டு பாய்கிறது.
இதனால் மட்டுப் படுத்தப்பட்டளவில் வாகன போக்குவரத்து நடைபெறுகிறது.
மழை தொடர்ந்தால் இப் பாதை முற்றாக துண்டிக்கப்படும் அபாயம் இருக்கிறது
பல வீதிகளில் போக்குவரத்துக்காக மக்கள் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
துரைவந்தியமேடு கிராமம் முற்றாக துண்டிப்பு!
.
இதேவேளை , அம்பாரை மாவட்டத்தின் கல்முனை கிட்டங்கி வீதியால் நீர் பாய்வதால் துரவந்திய மேடு தமிழ் கிராமத்துக்கு செல்வதற்கான பாதைகள் யாவும் மூடப்பட்டு கிராமம் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலை உருவாகியுள்ளது.
குறித்த கிராமத்திற்கு நிவாரணப்பணிகளை செய்யும் தொண்டு அமைப்புக்கள் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துடன் தொடர்புகொண்டு நிவாரணப்பணிகளை செய்தால் தற்போதைய நிலையில் அம்மக்களுக்கு உதவியாக இருக்கும் என கருதப்படுகிறது.
No comments