Column Left

Vettri

Breaking News

வெள்ள நீரால் பிடிக்கபட்ட அதிகளவான மீன்வகைகள்




 அம்பாறை  மாவட்டத்தில்   பருவ மழை   காரணமாக  அங்குள்ள  ஆறு  குளம் ஆகியவற்றிலும் கடற்கரை பகுதிகளிலும்  அதிகளவான  மீன் இனங்கள்  பிடிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன.


இம்மாவட்டத்தில் உள்ள கல்முனை கடற்கரை பள்ளிவாசல்  பகுதி மற்றும் கிட்டங்கி வீதி, சொறிக்கல்முனை , சேனைக்குடியிருப்பு, நற்பிட்டிமுனை பகுதிகளில்  வடிந்தோடும் வெள்ள நீரில்   சிறு மீன் முதல் பெரிய மீன்கள்  கட்டுவலை மற்றும்  எறி வலை மூலம் பிடிக்கப்பட்டு அவ்விடத்தில் விற்பனை செய்யப்படுகின்றன.

இவ்வாறு அதிகமான பிடிக்கப்படும் மீன்களை  சமையலுக்காக அவ்விடத்தில் மீனவர்களால் விற்கப்படுவதுடன்  மக்கள் ஆர்வமாக  கொள்வனவு செய்வதை காண முடிகிறது.தற்போது பெய்யும் மழை காரணமாக  நன்னீர் மீன்கள்  அதிகளவாக பிடிக்கப்படுகிறது.

இதில்  கோல்டன் செப்பலி, கணையான் ,கொய் கொடுவா,  பொட்டியான்,   வெள்ளையாபொடி, இறால்,நண்டு வகைள்    போன்ற   மீன்கள் அதிகளவான விலையில் விற்பனை செய்யப்படுவதுடன் இதர மீன்கள்  குறைந்த விலையில் விற்பனையாகின்றன.இதனால் நன்னீர் மீன் பிடித்தொழிலில் ஈடுபடும் மீனவர்கள் நல்ல வருமானம் ஈட்டக்கூடியதாக உள்ளதாக தெரிவித்தனர்.

இதே வேளை  பாண்டிருப்பு, சாய்ந்தமருது, நற்பிட்டிமுனை, சம்மாந்துறை, கல்முனை , மீன் சந்தையில் மீன் விற்பனை சூடுபிடித்துள்ளதுடன்  மீனவர்கள் பிரதான வீதிகளில் தற்காலிகமாக மீன் விற்பனையில் ஈடுபட்டுள்ளனர்.







No comments

Subscribe Us