84 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் 2679 குடும்பங்களை சேர்ந்த 8635 அங்கத்தவர்கள் வெள்ளத்தினால் பாதிப்பு -அம்பாரை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.ஜெகராஜன்
ஆலையடிவேம்பு நிருபர்
வி.சுகிர்தகுமார்
வெள்ள அனர்த்தத்தினால் அம்பாரை மாவட்டத்தில் 84 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அம்பாரை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.ஜெகராஜன் தெரிவித்தார்.
இதேநேரம் 2679 குடும்பங்களை சேர்ந்த 8635 அங்கத்தவர்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 7 தற்காலிக முகாம்களில் 126 குடும்பங்கள் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் தொடர்ந்தும் இடப்பெயர்வுகள் பதிவு செய்யப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கான சகல வசதிகளும் பிரதேச செயலாளர் தலைமையிலான உத்தியோகத்தர்கள் மேற்கொள்வதுடன் இவர்களுக்கான உதவிகளை பிரதேச செயலாளர்களுடன் இணைந்து மேற்கொள்ளுமாறு தன்னார்வ தொண்டு நிறுவனங்களிடம் கேட்டுக்கொண்டார்.
இந்நிலையில் சேனநாயக்கா சமுத்திரம் உள்ளிட்ட பல குளங்களின் நீர்மட்டம் அதிகரித்து வருவதாகவும் சிறுகுளங்களில் இருந்து நீர் வான்பாய்ந்து வருவதாகவும் இதனால் வெள்ள நிலை அதிகரித்துள்ளதாகவும் கூறினார்.
கடற்றொழில் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 2000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் வயல்நிலங்களும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் அவதான செயற்படுமாறும் கோரிக்கை விடுத்தார்.
இதேநேரம் வெள்ள நிலையினை பார்வையிடுவதற்காக ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்கு வருகை தந்த அவர் பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜிடம் நிலைமை தொடர்பில் கேட்டறிந்து கொண்டார்.
ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் அதிகளவான மரங்கள் ஆலயம் உள்ளிட்ட வீடுகள் மற்றும் மதில்களில் முறிந்து வீழ்ந்துள்ள நிலையில் சேதங்கள் ஏற்பட்டுள்ளன.
இடம்பெயர்ந்தவர்கள் அக்கரைப்பற்று திருவள்ளுவர் வித்தியாலயத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான சமைத்த உணவை ஆலையடிவேம்பு பிரதேச செயலாளரின் கோரிக்கைக்கு அமைய தனவந்தர்கள் வழங்கி வருகின்றனர்.
பிரதேச சபை தவிசாளர் ஆர்.தர்தாச தiமையிலான பிரதேச சபை உறுப்பினர்கள் மரங்களை அகற்றும் பணியில் இணைந்து கொண்டுள்ளனர். மின்சார சபையினர் அறுந்து வீழ்ந்த மின் இணைப்புக்களை சீராக்கி வருகின்றனர்.
ஆலையடிவேம்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி உள்ளிட்டவர்கள் சுகாதார நிலைமையினை பார்வையிட்டனர்.
அம்பாரை மாவட்டத்தில் பல வீதிகள் போக்குவரத்திற்காக தடை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments