ரெசின் கலை (Resin Art) மூலம் அழகு மற்றும் காட்சிப் பொருட்கள் தயாரித்தல் தொடர்பான பயிற்சி செயலமர்வு!!
நூருல் ஹுதா உமர்
ரெசின் கலை (Resin Art) மூலம் அழகு மற்றும் காட்சிப் பொருட்கள் தயாரித்தல் தொடர்பாக யுவதிகளுக்கு பயிற்சி செயலமர்வு சாய்ந்தமருது பிரதேச செயலக கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது. அம்பாறை மாவட்ட சமுர்த்தி காரியாலயத்தின் ஏற்பாட்டில் மாவட்ட சமுர்த்தி முகாமையாளர் திருமதி ரஞ்சனி அவர்களின் நெறிப்படுத்தலில் இப்பயிற்சி செயலமர்வு மாவட்டத்திலுள்ள பிரதேச செயலகங்களில் இடம் பெற்று வருகின்றன.
சாய்ந்தமருது பிரதேச செயலக சமுர்த்தி வங்கிச் சங்க முகாமையாளர் றியாத் ஏ. மஜீத் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபரும் பதில் மாவட்ட சமுர்த்தி பணிப்பாளருமான எஸ். ஜெகராஜன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.
இந்நிகழ்வில் கல்முனை பிரதேச செயலக சமுர்த்தி தலைமை பீட சிரேஷ்ட முகாமையாளர் ஏ.சீ. அன்வர், சாய்ந்தமருது பிரதேச செயலக சமுர்த்தி கருத்திட்ட முகாமையாளர் எஸ். றிபாயா, அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ. எப். ரிகாஸா ஷர்பீன், காரைதீவு சமுர்த்தி கருத்திட்ட உதவியாளர் ஏ. எம். பாயிஸ் உள்ளிட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வுக்கு பயிற்றுவிப்பாளராக கல்வி அமைச்சின் ரெசின் கலை (Resin Art) பயிற்றுவிப்பாளர் சஞ்சலா சுபாஷினி கலந்து கொண்டார். இப்பயிற்சி செயலமர்வில் சாய்ந்தமருது, கல்முனை, காரைதீவு, நிந்தவூர், சம்மாந்துறை ஆகிய பிரதேச செயலகங்களில் இருந்து பயிற்சியாளர்கள் கலந்து கொண்டனர்

No comments