Column Left

Vettri

Breaking News

தன்னியக்க வெள்ள வீதித்தடை உபகரணத்தை கண்டுபிடித்த மாணவனுக்கு 50 ஆயிரம் ரூபாய் பரிசு 




தன்னியக்க வெள்ள வீதித்தடை உபகரணத்தை கண்டுபிடித்த மாணவனுக்கு 50 ஆயிரம் ரூபாய் பரிசு ( வி.ரி.சகாதேவராஜா) சமகாலத்திற்கு பொருத்தமான தன்னியக்க வெள்ள வீதித்தடை உபகரணத்தை கண்டுபிடித்த சம்மாந்துறை மாணவனுக்கு ஊக்குவிப்பாக 50 ஆயிரம் ரூபாய் பரிசை சம்மாந்துறை பிரதேச சபை வழங்கி கௌரவித்தது. சம்மாந்துறை அல் - அமீர் வித்தியாலத்தின் தரம் 09 கல்வி பயிலும் மாணவன் ஏ.எம்.எம்.அப்ஹாம் தன்னியக்க வெள்ள வீதித் தடை உபகரணத்தை கண்டுபிடித்து மாகாண மட்டத்தில் முதலிடம் பெற்றிருந்தார் . அவரின் கண்டுபிடிப்பை ஊக்குவிக்கும் நோக்கில் (50,000/=) ஐம்பது ஆயிரம் ரூபாய் வழங்குவதற்கு சம்மாந்துறை பிரதேச சபையின் அனைத்து உறுப்பினர்களின் ஏகமனதாக ஆதரவளித்தனர். சம்மாந்துறை பிரதேச சபையின் விசேட அமர்வு தவிசாளர் ஐ.எல்.எம்.மாஹிர் தலைமையில் சபா மண்டபத்தில் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற பின்னர் சாதனை மாணவனை சபைக்கு அழைத்து அங்கு தவிசாளர் மாஹிர் காசோலை வழங்கி கௌரவித்தார்.

No comments