Column Left

Vettri

Breaking News

இணைந்த கரங்கல் அமைப்பினால் ஆசிரியர் பற்றாக்குறையான பாடசாலைகளுக்கு தொண்டர் ஆசிரியர்களை நியமித்து மேலதிக வகுப்புகள் ஆரம்பிப்பு...




இணைந்த கரங்கள் அமைப்பினால் தி /மூதூர் கல்லடி ஸ்ரீ மலை நீலியம்மன் வித்தியாலய பாடசாலையில் குறிப்பிட்ட சில வருடங்களாக கணித பாடத்தினை மாணவர்களுக்கு கற்பிப்பதற்கான ஆசிரியர் இல்லாத காரணத்தினால் வலயக் கல்வி அதிகாரிகளின் வேண்டுகோளுக்கு இணங்க இணைந்த கரங்கள் அமைப்பினால் ஆறு மாதங்களுக்கான கற்பிப்பதற்கான ஆசிரியரினை வழங்கும் ஆரம்பம் நிகழ்வு மூதூர் கல்லடி ஸ்ரீ மலை நீலியம்மன் வித்தியாலய அதிபர் சே. லோகிதராஜா தலைமையில் இடம்பெற்றிருந்தது திருகோணமலை மாவட்டத்தில் மூதூர் கல்வி வலயத்தில், அதிகஸ்ர கிராமத்தில் அமைந்துள்ள ஒரு பாடசாலையாகவும் இங்கு வாழ்கின்ற மக்கள் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களாகவும் காணப்படுகின்றனர். இதனை கருத்தில் கொண்ட இணைந்த கரங்களோடு பயணிக்கும் அவுஸ்ரேலியாவில் வசிக்கும் ராஜ்பவன் உணவக உரிமையாளரான திரு.ஜெயராஜ் விஸ்வலிங்கம் அவர்களின் தனிப்பட்ட நிதி பங்களிப்பில் கணித பாட ஆசிரியருக்கு மாதாந்தம்-Rs/20000ரூபாவும், மேலதிக வகுப்புக்காக,மலைநேர, ஆங்கில பாட ஆசிரியருக்கு மாதாந்தம்-Rs/10000 ரூபாவும் மாதாந்தம் வழங்க முன்வந்துள்ளார். மேலும் இந்த நிகழ்வில் பாடசாலை பிரதி அதிபர்,ஆசிரியர்கள் மாணவர்கள்,பெற்றோர்கள் மற்றும்,மூதூர் கோட்டக்கல்வி அதிகாரி, இணைந்த கரங்களின் அனைவரும் இணைந்து இந்த நிகழ்வை மிக சிறப்பாக ஆரம்பித்து வைத்திருந்தனர்.

No comments