உலக குடியிருப்பு தினத்தினை முன்னிட்டு நாவிதன்வெளி பிரதேச செயலக பிரிவில் கடந்த கால யுத்தத்தில் வீடுகளை இழந்த மக்களுக்கு வீடுகள் கையளிப்பு நிகழ்வு நடைபெற்றது.
நகர அபிவிருத்தி,நிருமாணம் மற்றும் வீடமைப்பு அமைச்சினால் நிருமாணிக்கப்பட்ட வீடுகளை பயனாளிகளது பாவனைக்கு கையளித்தல் மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வானது கடந்த 03 ஆம் திகதியன்று பி.ப 2.00 மணிக்கு நாவிதன்வெளி பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
அம்பாறை பாராளுமன்ற உறுப்பினரும் பிரதேச அபிவிருத்தி குழு தலைவருமாகிய ஏ.ஆதம்பாவா, அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக அபேயவிக்கிரம,நாவிதன்வெளி பிரதேச சபையின் தவிசாளர் இந்திரன் ரூபசாந்தன்,உதவி அரசாங்க அதிபர், நாவிதன்வெளி பிரதேச செயலக செயலாளர் ராகுலநாயகி சசீந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பயனாளிகளுக்கு வீடுகள் கையளிப்பு இடம்பெற்றன.
No comments