Column Left

Vettri

Breaking News

நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையினால் உயர்தர மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி!!




பாறுக் ஷிஹான்


வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் அம்பாறை மாவட்ட செயலக நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையினால் பாடசாலை உயர்தர பிரிவு மாணவர்கள் மத்தியில் நுகர்வோர் அதிகார சபையின் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இன்று சம்மாந்துறை முஸ்லீம் மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி பாடசாலை அதிபர் ஏ.ஆர்.எம் உவைஸ் தலைமையில் மற்றும் வர்த்தக கலை பிரிவு பகுதித் தலைவர் கியாஸ் வழிகாட்டலில் இடம்பெற்றது.

இதன் போது நுகர்வோர் உரிமைகள்,பொறுப்புகள்,சட்டங்கள், பாதுகாப்பு மற்றும் பொருட்கள் சேவைகளின் போது கவனிக்க வேண்டிய முக்கியமான விடயங்கள் மற்றும் தற்போதைய சந்தையில் பொருட்களின் அரசாங்க கட்டுப்பாட்டு விலை மற்றும் அதிகார சபையின் சட்ட திட்டங்கள் சம்பந்தமான மாணவர்களுக்கு விளக்கக்காட்சி ஊடாக தெளிவுபடுத்தப்பட்டது.

இவ் விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு பிரதான வளவாளராக  நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையின் புலனாய்வு உத்தியோகத்தர்  முஹம்மட் ஸாஜித் ஸமான் மற்றும் கலந்து கொண்டார்.மேலும் உயர் தர பிரிவு வர்த்தக பிரிவு ஆசிரியார்களும் கலந்து கொண்டனர்.

No comments

Subscribe Us