நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழையுடனான வானிலை!!
நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழையுடனான வானிலை தொடரும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
மேல், சபரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களின் சில இடங்களில் 100 மில்லி மீற்றருக்கும் அதிகளவில் மழை வீழ்ச்சி பதிவாகக் கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.இதேவேளை, நாட்டின் சில மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை இன்றிரவு 7 மணி வரை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது
No comments