போதைப் பொருள் விற்பனை செய்த குற்றச்சாட்டில் கடந்த சில நாட்களுக்குள் கைது செய்யப்பட்ட 8 பேர் நீதிமன்றில் முன்னிலை!!
வி.சுகிர்தகுமார்
போதைப் பொருள் விற்பனை செய்த குற்றச்சாட்டில் கடந்த சில நாட்களுக்குள் கைது செய்யப்பட்ட 8 பேர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜிஎம். சுனில் திசாநாயக்க தெரிவித்தார்.
இந்நடவடிக்கை தொடரும் எனவும் போதைப்பொருள் மற்றும் குற்றச்செயல்களில் ஈடுபடுகின்றவர்களின் விபரங்களை பொதுமக்கள் தமக்கு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.
பாடசாலைகளில் நிலவும் போதைப்பொருள் தொடர்பான பிரச்சினைகள் மற்றும் அதிபர்கள் ஆசிரியர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் போன்றவற்றிற்கு தீர்வு காணும் வகையில் ஆலைடிவேம்பு பிரதேச செயலகத்தில் இன்று(18) நடைபெற்ற அதிபர்கள் உடனான சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.
ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இச்சந்திப்பில் அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜிஎம். சுனில் திசாநாயக்க மற்றும் பாடசாலைகளின் அதிபர்கள் பிரதேச செயலக சிறுவர் மகளிர் நன்நடத்தை பிரிவின் உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
இங்கு கருத்து தெரிவித்த பாடசாலைகளின் அதிபர்கள், மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளுக்கு குந்தகம் விளைவிக்கும் போதைப்பொருள் மற்றும் அதனை விற்பனை செய்யும் நபர்கள் பாடசாலை மாணவர்களுக்கு இடையூறு விளைவிக்கும் இளைஞர் கூட்டங்கள் தொடர்பில் எத்தி வைத்தனர்.
இதற்கு பதிலளித்த பொலிஸ் பொறுப்பதிகாரி நாடு தற்போது அமைதியான சூழலில் உள்ளது. இந்த அமைதியை குழப்பும் வகையில் நடந்து கொள்ளும் அனைவரும் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர். இதன் ஒரு கட்டமாக அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு அட்டாளைச்சேனை ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு வழங்கப்பட்டு வருகின்றது. தற்போது பிரச்சினைகள் கட்டுப்பாட்டிற்குள் கொண்வரப்பட்டு கொண்டிருக்கின்றது.
இதற்காக பொதுமக்களும் கைகோர்த்து செயற்படவேண்டும் எனவும் பாடசாலையின் அதிபர்கள் ஆசிரியர்கள் அரச திணைக்களங்களின் அதிகாரிகள் சமூக ஆர்வலர்கள் மதத்தலைவர்கள் என அனைவரும் ஒன்றுபடவேண்டும் என கேட்டுக்கொண்டார்.

No comments