Column Left

Vettri

Breaking News

பிரதி அதிபர் மீது வீடு புகுந்து தாக்குதல் நடாத்திய நபர்களை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்




 வி.சுகிர்தகுமார்  

 அக்கரைப்பற்று, ஸ்ரீ இராம கிருஷ்ண தேசிய பாடசாலையின் பிரதி அதிபர் மீது வீடு புகுந்து தாக்குதல் நடாத்திய நபர்களை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என பாடசாலையின் அதிபர் ஆசிரியர்கள் பாடசாலை அபிவிருத்திக்குழுவினர் இன்று காலை எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
அக்கரைப்பற்று, ஸ்ரீ இராமகிருஷ்ணா தேசிய பாடசாலையின் பிரதி அதிபர் நேற்றைய தினம் (02) ஒரு குழுவினரால் வீடு புகுந்து தாக்கப்பட்டுள்ளார்.
இதனை கண்டித்து அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஷ்ணா தேசிய பாடசாலையின் அதிபர் ஆசிரியர்கள் இன்றைய தினம் (02) பாடசாலை முன்றலில் கண்டன ஆர்பாட்டத்தினை முன்னெடுத்திருந்தார்கள்.  
நேற்றய தினம் வாணி விழா வீதி உலாவின் போது பெண் மாணவிகளை இளைஞர்கள் சிலர் புகைப்படம் எடுத்துள்ளனா. இதனை கண்டு கொண்ட பிரதி அதிபர் மாணவிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு புகைப்படம் எடுப்பதை நிறுத்துமாறு கூறியிருக்கின்றார்.
 இந்நிலையில் வாணி விழா நகர் உலாவும் சிறப்பாக இடம்பெற்று முடிவடைந்தது.
 இதன் பின்னராக பிரதி அதிபர் பாடசாலை முடிவடைந்து தனது வீட்டுக்கு சென்று தனது வழமையான நடவடிக்கையில் ஈடுபட்ட நிலையில் அவரது வீடு தேடிச்சென்ற ஒரு குழுவினர் வீட்டினுள் புகுந்து தாக்கி வீட்டின் பொருட்களுக்கும் தேசம் ஏற்படுத்தியதாக அறிய முடிகிறது.  
இச்சம்பவத்தை கண்டித்தும் சம்மந்தப்பட்டவர்கள் உடன் கைது செய்யப்பட வேண்டும் எனவும் கோரி ஆர்ப்பாட்டம் செய்ததுடன் ஆசிரியர் சமூகத்தின் மீது  இவ்வாறு இடம்பெறும் தாக்குதல் சம்பவங்கள் கவலைக்குரியதும்  கண்டிக்கத்தக்கது அவர்கள் கூறுகின்றனா.
இதேநேரம் அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பாடசாலைக்கு சென்று அதிபர் உள்ளிட்டவர்களுடன் கலந்துரையாடியதுடன் விசாரணைகளை முன்னெடுப்பதாக உறுயளித்துள்ளார்.



No comments