போதைப்பொருள் பேரழிவை வேரோடு ஒழிப்பதற்கான 'முழு நாடுமே ஒன்றாக' தேசிய செயற்பாடு நிகழ்வு!!
பாறுக் ஷிஹான்
போதைப்பொருள் பேரழிவை வேரோடு ஒழிப்பதற்கான 'முழு நாடுமே ஒன்றாக' தேசிய செயற்பாடு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று (30) அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது.இதற்கமைய இந்த நிகழ்வானது கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் இன்று காலை 10 மணிக்கு ஆரம்பமாகியது.
இதன் போது 'போதைப்பொருள் பேரழிவை வேரோடு ஒழிப்பதற்கான ' முழு நாடுமே ஒன்றாக – தேசிய செயற்பாடு' தொடர்பில் கல்முனை பிரதேச செயலகத்தில் உறுதி எடுத்தல் நிகழ்வு கல்முனை பிரதேச செயலாளர் சட்டத்தரணி அஷ்ஷெய்க் ரீ.எம்.எம்.அன்சார் தலைமையில் இன்று நடைபெற்றது.
இதன் போது போதைப்பொருள் பேரழிவை வேரோடு ஒழிப்பதற்கான 'முழு நாடுமே ஒன்றாக' தேசிய செயற்பாடு தொடர்பில் பிரதேச செயலாளரினால் உரையின் போது தெளிவுபடுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் கல்முனை பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எல்.ஏ. மஜீட் , பிரதேச செயலக கணக்காளர் கே.எம்.எஸ். அமீர் அலி , பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் ஏ.சி.எம் .பளீல்,பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் ஜனூபா நெளபர், சமூர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் ஏ.சி அன்வர் , அபிவிருத்தி ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர் கே.எல் யாஸீன் பாவா , போதைப்பொருள் முற்தடுப்பு அபிவிருத்தி உத்தியொகத்தர் றாசீக் நபாயிஸ், மற்றும் பல அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் உட்பட காரியாலய உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
அரசியல் மற்றும் பொருளாதார விடயங்கள் குறித்து விவாதிக்க முடிந்தாலும்,நாட்டிலிருந்து போதைப்பொருள் பேரழிவை ஒழிப்பதற்கான தேசிய பொறுப்பை நிறைவேற்றுவதில் இனிமேலும் விவாதித்துக் கொண்டிருப்பதற்கு இடமில்லை.
போதைப்பொருள் பேரழிவை ஒழிப்பதற்கான துரித வேலைத்திட்டத்திற்காக முழு நாடும் ஒன்றுபட வேண்டும்.
தற்போது தேசிய பேரழிவாக மாறி இளைஞர் சமூகத்தைப் போன்றே பாடசாலை மாணவர்களின் உயிருக்கு ஆபத்தை விளைவித்து வரும் போதைப் பொருள் வர்த்தகத்தை மையமாகக் கொண்டு அநேகமான குற்றங்கள் நடப்பதும் அவதானிக்கப்பட்டுள்ளது.
அதன்படிஇ தேசிய மட்டத்தில் அரசியல் தலைமைத்துவம், செயற்திறனாக முடிவெடுக்கும் பொறிமுறை மட்டுமன்றி பரந்த பொதுமக்கள் பங்கேற்புடன் கூடிய தேசிய மட்டத்திலான வேலைத்திட்டத்தின் ஊடாக போதைப்பொருள் அச்சுறுத்தலை முழுமையாக ஒழிக்க வேண்டும்.
அந்த தேசிய நோக்கத்தை அடைவதற்காக இ 'முழு நாடுமே ஒன்றாக – தேசிய செயற்பாடு' முன்னெடுக்கப்படுவதோடு பரந்தளவிலான பிரச்சார செயல்முறையின் ஊடாக போதைப்பொருள் அச்சுறுத்தல் குறித்து சமூகத்தின் விழிப்புணர்வை ஏற்படுத்த ஒரு பாரிய திட்டமொன்றாக இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது என்றும் ஜனாதிபதி கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments