முழு நாடுமே ஒன்றாக' தேசிய செயற்பாட்டு திட்டம் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில்
முழு நாடுமே ஒன்றாக' தேசிய செயற்பாட்டு திட்டம் அம்பாரை மாவட்ட பிரதேச செயலகங்களிலும் அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டது!!
இலங்கை அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் போதைப்பொருள் அனர்த்தத்தை தோற்கடிக்கும் நோக்கில் 'முழு நாடுமே ஒன்றாக' எனும் தேசிய செயற்பாட்டுத்திட்டம் இன்றைய தினம் ஜனாதிபதி தலைமையில் அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டது.இதற்கமைவாக ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ் தலைமையில் உதவிப்பிரதேச செயலாளர் மா.இராமக்குட்டி ஒருங்கிணைப்பில் இன்று இடம்பெற்றது.
'முழு நாடுமே ஒன்றாக' தேசிய செயற்பாட்டு திட்டம் நிகழ்வுகள் மற்றும் ஜனாதிபதியின் விசேட உரை நிகழ்நிலை ஊடாக காண்பிக்கப்பட்டதுடன்
போதைப் பொருள் அற்ற தேசத்தை உருவாக்குவோம் எனும் தொனிப்பொருளில் உத்தியோகத்தர்களினால் சத்தியப்பிரமான நிகழ்வு இடம்பெற்றது.
நிகழ்வுகளில் பிரதேச செயலக அதிகாரிகள் கலந்து கொண்டதுடன் சத்தியப்பிரமாணமும் செய்து கொண்டனர்.
No comments