2026ம் ஆண்டு பாடவிதானங்களில் மாற்றம்!!
2026ம் ஆண்டு நடைமுறைக்கு வரவுள்ள 1 முதல் 6ம் வகுப்பு வரையான பாடவிதான மறுசீரமைப்பு குறித்து வழிகாட்டல்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
21ம் நூற்றாண்டு மற்றும் அதற்கு அப்பாலுள்ள சவால்களுக்கு முகம்கொடுத்தல், நிரந்தர தேசிய அபிவிருத்திக்கும் நாட்டின் அமைதிக்கும் ஒத்துழைப்பு வழங்கும் பிரஜையை உருவாக்கும் நோக்கில் இந்த கல்வி மறுசீரமைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதற்கமைய முதற்கட்ட கல்வி மறுசீரமைப்பை ஒன்று முதல் 6ம் வகுப்பு வரையான மாணவர்களின் பாடப் புத்தகங்களில் மேற்கொள்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
No comments