Home
/
இலங்கை செய்தி
/
அம்பாறை மாவட்டத்தில் புதிய உரவகை அறிமுகம் ;பார்க் பணிப்பாளர் பாஸ்கரன் விளக்கம் !!
அம்பாறை மாவட்டத்தில் புதிய உரவகை அறிமுகம் ;பார்க் பணிப்பாளர் பாஸ்கரன் விளக்கம் !!
( வி.ரி.சகாதேவராஜா)
அம்பாறை மாவட்டத்தில் புதிய இலகுவாக உறிஞ்சும் திரவ உரவகை அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.
பார்க் நிறுவன பணிப்பாளர் ரத்னசபாபதி பாஸ்கரன் அம்பாறை மாவட்டத்திற்கு விஜயம் செய்து விளக்கமளித்தார்.
காரைதீவு மற்றும் மல்வத்தை கமநல நிலையத்தில் விவசாயிகளுக்கான விழிப்புணர்வு செயலமர்வு நேற்று முன்தினம் நடைபெற்றது.
ஓய்வு நிலை கமநல உத்தியோகத்தர் மா.சிதம்பரநாதன் ஒருங்கிணைப்பில் இச் செயலமர்வு நடைபெற்றது.
மற்றுமொரு பணிப்பாளர் ஜெயபால சிங்கம் பிரதீபன் சந்தைப்படுத்தல் முகாமையாளர் சம்பத் வித்யா ரத்ன மற்றும் அவரது குழுவினர் கலந்து கொண்டனர்.
அங்கு பணிப்பாளர் பாஸ்கரன் கூறுகையில்..
Barck International (Pvt) Ltd* என்பது இலங்கையின் விவசாயத் துறையில் ஒரு குறுகிய
காலத்தில் சிறந்து விளங்கும் ஒரு வணிக குழுமமாகும்.
விவசாயத்துறையில்
நம்பிக்கைக்குரிய மற்றும் பன்முகப்படுத்தப்பட்ட வணிக நிறுவனம் ஆகும்.
BARCK உரம், அனைத்து பயிர்களிலும் சிறந்த விளைச்சலை வழங்கி,
விவசாயிகளிடையே நம்பிக்கையையும் அரச அதிகாரிளுடன் வலுவான
கூட்டுறவையும் வளர்த்துள்ளோம்.
ஊட்டச்சத்துள்ள தாவரங்களுக்கு எளிதில் உறிஞ்சக்கூடிய வடிவங்களில்
மாறும். இரசாயன உரங்கள், பயிர் விளைச்சலும்
தாவர ஆரோக்கியமும் அதிகரிக்கின்றன.
என்றார்.
அம்பாறை மாவட்டத்தில் புதிய உரவகை அறிமுகம் ;பார்க் பணிப்பாளர் பாஸ்கரன் விளக்கம் !!
Reviewed by Thanoshan
on
9/27/2025 01:32:00 PM
Rating: 5
No comments