Column Left

Vettri

Breaking News

கல்முனை பொலிஸ் நிலைய தலைமை பொறுப்பதிகாரி ரம்சீன் பக்கீருக்கு பிரியாவிடை!!




(பாறுக் ஷிஹான்)


கல்முனை தலைமை பொலிஸ் நிலையத்தில் கடந்த 3 வருடத்திற்கு மேலாக  கடமையாற்றிய  பிரதான பொலிஸ் பரிசோதகர் ரம்சீன் பக்கீரின்  இடமாற்றத்தை முன்னிட்டு  அவருக்கான பிரியாவிடை நிகழ்வு இன்று மாலை  சமூக பொலிஸ் பிரிவு பொறுப்பதிகாரியும்  பிரதம பொலிஸ் பரிசோதகருமான  வாஹிட் ஏ.எல்.ஏ. வாஹிட் தலைமையில் கல்முனை பொலிஸ் நிலைய கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

அவரது சேவைக்காலத்தில் பொது மக்கள் மத்தியிலும்  பொலிஸ் நிலையத்திற்கும் இடையில் நெருங்கிய உறவு காணப்பட்டது. இதனால் கல்முனை தலைமை  பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் பாரிய கொள்ளைச் சம்பவம் மற்றும் திருட்டுச் சம்பவங்கள் என்பன இடம் பெறாமல் காணப்பட்டமை சிறப்பம்சமாகும்.

இந்நிகழ்வில் கலந்து கொண்டவர்கள்  கருத்து தெரிவிக்கையில்  கல்முனை தலைமை பொலிஸ் நிலையத்தில் கடந்த 3 வருடத்திற்கு மேலாக  கடமையாற்றிய  பிரதான பொலிஸ் பரிசோதகர் ரம்சீன் பக்கீர் அவர்களின் சேவைக் காலத்தில் பல்வேறு மாற்றங்கள்   இடம்பெற்றுள்ளன.

அதுமட்டுமின்றி விசேடமாக போதைப்பொருள் ஒழிப்பு,போக்குவரத்து ஒழுங்குபடுத்தல்,சமூக பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களில் தனது முழுமையாக அர்ப்பணித்த ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் போது பிரியாவிடை பெற்றுச் செல்லும் கல்முனை பொலிஸ் நிலைய தலைமை பொறுப்பதிகாரி ரம்சீன் பக்கீர் கருத்து தெரிவிக்கையில்

கல்முனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் எனது தலைமையின் கீழ்  பல்வேறு பெருங்குற்றப்பிரிவு குற்றச் செயல்களை கட்டுப்படுத்தி உள்ளேன் என்று நினைக்கும் போது பெருமையாக உள்ளது. இதற்கு   பொதுமக்கள் மற்றும் சக பொலிஸ் உத்தியோகத்தர்கள் உதவியாக இருந்தனர். இவ்வாறு உதவியாக இருந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்' என கருத்து தெரிவித்தார்.


இந்நிகழ்விற்கு  கல்முனை தலைமையக பொலிஸ்  மோட்டார் போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரியும்  பிரதம பொலிஸ் பரிசோதகருமான   பி.ரி  நஸீர் ,கல்முனை தலைமையக  பொலிஸ் நிலைய சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவின் பொறுப்பதிகாரி திருமதி எஸ்.பி.என்.எம்.  சுவர்ணகாந்தி, உட்பட  பொலிஸ் அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டு  அவரின் சேவையை பாராட்டி நினைவுப் பரிசுப் பொருட்கள் மற்றும் பொன்னாடை போர்த்தி கௌரவிப்பும் இடம்பெற்றன.

No comments