Column Left

Vettri

Breaking News

ஏழாம் கிராம மாணவியின் கல்விக்கு உதவ துவிச்சக்கர வண்டி அன்பளிப்பு!




( வி.ரி. சகாதேவராஜா)

சம்மாந்துறை வலயத்தில் உள்ள நாவிதன்வெளி ஏழாம் கிராமம் கணேச வித்யாலயத்தில் கல்வியை விடாமல் தொடர்வதற்கு வசதி குறைந்த மாணவிக்கு துவிக்கர வண்டியை அன்பளிப்பு செய்யும்
வைபவம் பாடசாலை அதிபர் திருமதி கார்த்திகாயினி துரைலிங்கம் தலைமையில் இன்று (15) திங்கட்கிழமை நடைபெற்றது .

பிரதம அதிதியாக மக்கள் சமத்துவ நல ஒன்றியத்தின் நிர்வாகப் பணிப்பாளர் திருமதி குபேரலட்சுமி விஜயகுமாரன்( ஜீவா) சுவிசிலிருந்து நேரடியாக வந்து கலந்து கொண்டு இதனை வழங்கி வைத்தார் .

நிகழ்வில் சம்மாந்துறை வலயக்கல்விப்  பணிப்பாளர் செ.மகேந்திரகுமார்,  ஓய்வு நிலை உதவிக் கல்விப் பணிப்பாளர் வித்தகர் விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜா ஆகியோர் அதிதிகளாக கலந்து கொண்டனர்.

துவிச்சக்கர வண்டியை மாணவியின் குடும்பத்திற்கு பரோபகாரி. விஜிஜீவா வழங்கி வைத்தார்.

மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள இப் பாடசாலை மாணவர்களையும் அர்ப்பணிப்புடன் பணியாற்றும் ஆசிரியர்களையும் கௌரவிக்குமுகமாக உளப்பூரிப்பில் ஒரு லட்சம் ரூபாயை பாடசாலை அதிபர் திருமதி கார்த்திகாயினியிடம் கொடை வள்ளல் குபேர லட்சுமி ஜீவா அந்த இடத்தில் வழங்கி வைத்தார்.

பிரதி அதிபர் எஸ்.ஜீவானந்தம் நிகழ்வை நெறிப்படுத்த,  மாணவி சந்தியா நன்றியுரையாற்றினார்.

No comments