இலங்கையில் மிகவும் ஆபத்தான போதைப்பொருள் கண்டுபிடிப்பு!!
வெலிகமவில் சமீபத்தில் கைப்பற்றப்பட்ட சந்தேகிக்கப்பட்ட போதைப்பொருள் ‘மெபெட்ரோன்’ என்ற ஆபத்தான போதைப்பொருளென, அரசாங்க பகுப்பாய்வாளர் உறுதிப்படுத்தியுள்ளதாக தென் மாகாண பிரதி பொலிஸ் மாஅதிபர் கித்சிறி ஜெயலத் தெரிவித்தார். இந்த போதைப் பொருள் இம்முறையே முதலாவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். ‘ஐஸ்’ போன்ற போதைப் பொருளை விடவும் மெபெட்ரோன் மிகவும் ஆபத்தானது என்பதை அரசாங்க பகுப்பாய்வாளரின் அறிக்கை வெளிப்படுத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
வெலிகம பகுதியில் ‘ஐஸ்’ போதைப்பொருள் உற்பத்திக்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஒரு இடத்தை பொலிஸார் சோதனை செய்த பின்னர், இது கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த வாரம் நடத்தப்பட்ட சோதனையின் போது 18 வயதான மாலைத்தீவு நாட்டைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டார்.’ஐஸ்’ தயாரிப்பில் பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் பொருட்களையும் இதன்போது அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
No comments