Column Left

Vettri

Breaking News

சாரதிகளுக்கான மகிழ்ச்சி செய்தி!!




 புதுப்பித்தல் செயல்பாட்டின் போது வழங்கப்படும் தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரம் இன்று (30) முதல் நுகேகொடையில் உள்ள தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனத்தால் வழங்கப்படும் என்று மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் அறிவித்துள்ளது.


இது இன்று முதல் ஒரு முன்னோடித் திட்டமாக செயல்படுத்தப்படும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

புதுப்பித்தல் செயல்பாட்டின் போது தற்போதுள்ள சாரதி அனுமதிப் பத்திரத்தில் எந்த மாற்றங்களும் தேவையில்லை என்றால், தற்காலிக அனுமதிப் பத்திரத்தை நுகேகொடையில் உள்ள போக்குவரத்து மருத்துவ நிறுவனத்தில் நேரடியாகப் பெற்றுக்கொள்ள முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தற்காலிக சாரதி அனுமதிப் பத்திரங்களுக்கான விண்ணப்பதாரர்கள் இனி வெரஹெரயில் உள்ள மோட்டார் போக்குவரத்து அலுவலகத்திற்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை என்று திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.

No comments