Column Left

Vettri

Breaking News

இனியொரு போர் ஏற்படாத வகையில் சகல சமூகங்களுக்கும் சம சந்தர்ப்பம்!!




 இனியொரு போர் ஏற்படாத வகையில் நாட்டை முன்னோக்கி நகர்த்தும் செயற்பாடுகளை முன்னெடுக்கவுள்ளதாக, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஜப்பானுக்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, அங்குள்ள இலங்கையர்களை சந்தித்து உரையாடிய போதே  மேற்கண்டவாறு  தெரிவித்துள்ளார்.

இலங்கையர்கள் மத்தியில் உரையாற்றிய ஜனாதிபதி;

தேசிய பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும். சிங்களவர்கள், தமிழர்கள் மற்றும் முஸ்லிம்களுக்கிடையே மேலும் மோதல்கள்  இல்லாத வகையில், நாட்டை ஆள்வதே எங்கள் அணுகுமுறையாகும். போரினால்,வடக்கு மக்கள்  மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.எனவே, இனிமேல் போரில்லாத வகையில் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்லும் தேசிய ஒற்றுமையை உருவாக்க வேண்டும்.இதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளோம்.வடக்கு மக்களுக்குத் தேவையான அபிவிருத்தி மற்றும் சட்டப் பாதுகாப்புகள் வழங்கப்படவுள்ளது.  சிங்கள, தமிழ், முஸ்லிம் என அனைத்து மக்களுக்கும் சம உரிமைகள் உள்ள ஒரு நாட்டையும் நாங்கள் உருவாக்கி வருகிறோம் பொருளாதாரம் மற்றும் சசர்வதேச ந்தையில் எந்த நாடுகளும் தனியாக முன்னேற முடியாது.சிறந்த இராஜதந்திர உறவுகளே  இலங்கையை உலகின் உச்சத்திற்கு உயர்த்தும். நாட்டை முன்னோக்கி நகர்த்துவதற்கு, தேசிய ஒற்றுமையை உருவாக்க வேண்டும். இலங்கை வரலாற்றில் எந்த இன மோதல்களும்  தலைதூக்காத ஆண்டாக கடந்த வருடம் வரலாற்றில் இணைகிறது. இலங்கையிலோ அல்லது நாட்டிற்கு வெளியேயோ வசிக்கும் எந்தவொரு இலங்கையரும் தனிப்பட்ட சலுகைகள் அல்லது  நலன்களை எதிர்பார்த்து தற்போதைய அரசாங்கத்தை ஆட்சிக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கவில்லை.அவர்கள் அனைவரும் எதிர்பார்த்த மாற்றத்திற்கு அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது. இதன் அடிப்படையில் அரசாங்கத்தின் ஒரு வருட பயணத்தின் வெற்றியை அளவிட வேண்டும்.  இந்நிலையில், அடுத்த வரவு செலவுத் திட்டத்தில் புதிய வரிகளை அறிமுகப்படுத்த எதிர்பார்க்கவில்லை. எதிர்காலத்தில் சில வரி  வீதங்களைக் குறைப்பதிலும் கவனம் செலுத்தப்படும்.கட்டியெழுப்பப்படும்  இலங்கையில் முதலீடு செய்து, நாட்டின் வெற்றிப் பயணத்தில்  பங்காளராகுங்கள். எதிர்கால சந்ததியினரை போதைப்பொருள் அச்சுறுத்தலிலிருந்து காப்பாற்றவும் நாங்கள் பாடுபடுகிறோம். போதைப்பொருள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் பின்னிப் பிணைந்துள்ளன.


No comments