Column Left

Vettri

Breaking News

கல்முனை றோட்டரிக் கழகம் கஷ்டப்பிரதேச மாணவர்களுக்கு கற்றல் உதவிகள்; கன்பரா உறுப்பினர் ரவீந்திரன் பங்கேற்பு!




( வி.ரி. சகாதேவராஜா)

கல்முனை றோட்டரிக் கழகம் அவுஸ்ரேலிய கன்பேரா றோட்டரிக்கழகத்தின் நிதியுதவியுடன்  றாணமடு இந்துக் கல்லூரி மற்றும் அன்னமலை கணேசா  வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளின் 420 மாணவர்களுக்கு கற்றலை மேம்படுத்தும் வேலைத்திட்டத்தின்  கீழ் 391,000/- பெறுமதியான அப்பியாசக்கொப்பிகளை வழங்கியுள்ளது.

இந்நிகழ்வு  கல்முனை றோட்டரிக் கழகத்தின் 2025/26 ம் வருடத்திற்கான தலைவர்  இ. தரணிதரன் தலைமையில் நேற்று முன்தினம் நடைபெற்றது.

, பிரதம அதிதியாக அவுஸ்திரேலியா கன்பேரா கழகத்தின் அங்கத்தவர் த. ரவீந்திரன் கலந்து சிறப்பித்தார்.

மேலும் செயலாளர் மு. சிவபாதசுந்தரம்,  றொட்டேரியன் மு. அமிர்தலிங்கம் அகியோருடன், அதிபர் ஆசிரியர்களும் பங்குபற்றினர்.

றொட்டேரியன் ரவீந்திரன்  மட்டக்களப்பு அமெரிக்கன் சர்வதேச பல்கலைக்கழகத்தில் ஆங்கில டிப்ளோமா கற்கைநெறி பயிலும் மாணவர்களின் மீளாய்வு தொடர்பான கலந்துரையாடலிலும் பங்குபற்றினார்.
கன்பேரா றோட்டரிக்கழகம் இக்கற்கை நெறிக்கு 680,000/- வை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

No comments