வி.சுகிர்தகுமார்
திருக்கோவில் பிரதேச சபைக்குட்பட்ட தாண்டியடி விக்னேஸ்வரா வித்தியாலயத்திலும் தம்பிலுவில் மத்திய சந்தைப்பிரதேசத்திலும் இரு பெரும் நிகழ்வுகள் நாளை (14) இடம்பெறவுள்ளதாக பிரதேச சபை தவிசாளர் சுந்தரலிங்கம் சசிகுமார் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
தம்பிலுவில் மத்திய சந்தையில் விவசாய உற்பத்தி பொருட் கண்காட்சியும் புதிய விதைகள் அறிமுகம் மற்றும் விற்பனை நிலைய திறப்பு விழாவும் இடம்பெறவுள்ளதுடன் தாண்டியடி விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள
இலவச வைத்திய முகாமும் இடம்பெறவுள்ளதாக அவர் கூறினார்.
குறித்த வைத்திய முகாமில் 2000 ஆயிரம் பேர் அளவில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படும் நிலையில் அவர்களுக்கான காலை உணவு ஏற்பாட்டினை அவர் மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இதேநேரம் கடந்த காலத்தில் 200 ரூபாய் பெறுமதியான நல்ல பயிர்விதைகளை பெற விவசாயிகள் பெரும் செலவு செய்து பிற நகரங்களுக்கு சென்றதாகவும் விவசாய உற்பத்திகளை பெறுவதற்கான விற்பனை சந்தை திறப்பதன் மூலம் விவசாயிகளின் தேவைப்பாடுகள் பூர்த்தி செய்யப்படவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
No comments