மருதமுனையில் ஊடகவியலாளர் போன்று நடித்து உருமறைப்பு செய்து தலைமறைவாகி வாழ்ந்த திருட்டு சந்தேக நபர் கைது!!
பாறுக் ஷிஹான்
ஊடகவியலாளர் போன்று நடித்து உருமறைப்பு செய்து தலைமறைவாகி வாழ்ந்த திருட்டு சந்தேக நபரை உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி மைதானத்தில் வைத்து வெள்ளிக்கிழமை(12) இரவு சாய்ந்தமருது பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரபல ஆடையகம் ஒன்றில் கடந்த நோன்பு காலத்தில் திருட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றிருந்தது.குறித்த திருட்டு தொடர்பில் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர் உரிய ஆடையகத்தின் உரிமையாளரின் கவனத்திற்கு கொண்டு வந்ததுடன் பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு அளித்திருந்தார்.
இதற்கமைய பொலிஸாரும் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர்.இந்நிலையில் குறித்த பிரபல ஆடையகத்தில் உடுதுணி கொள்வனவில் ஈடுபட்ட பாதிக்கப்பட்ட குடும்பமும் மற்றுமொரு வழியில் தாங்கள் கொள்வனவு செய்த பொருட்களுக்கான பணத்தினை செலுத்தியிருந்தது.
பின்னர் குறித்த விடயம் தொடர்பில் தனது வாடிக்கையாளருக்கு ஏற்பட்ட களங்கம் தொடர்பில் தனது கடையில் பொருத்தி இருந்த பாதுகாப்பு கமராவினை ஆராய்ந்த உரிமையாளர் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட பணியாளரை இனங்கண்டு கொண்டார்.அத்துடன் பொலிஸாருக்கும் அறிவித்ததுடன் அச்சந்தேக நபரின் பிறந்த இடமான காத்தான்குடி பகுதி மற்றும் சந்தேக நபர் திருமணம் செய்திருந்த அட்டாளைச்சேனை பகுதிக்கும் சென்று பொலிஸார் குறித்த சந்தேக நபரை விசாரித்து தேடியுள்ளனர்.
எனினும் தன்னை கைது செய்ய பொலிஸார் வருவதை அறிந்த குறித்த சந்தேக நபர் தனது அடையாளத்தை உருமறைப்பு செய்து ஊடகவியலாளர் போன்று பாவனை செய்து சுமார் 7 மாதங்களாக தலைமைறைவு வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளார்.
இந்நிலையில் அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மருதமுனை பகுதியில் வெள்ளிக்கிழமை(12) மின்னொளி உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியின் இறுதி போட்டி நடைபெற்றது.இப்போட்டியில் காத்தான்குடி பகுதி விளையாட்டுக்கழகமும் மருதமுனை பகுதி விளையாட்டுக்கழகமும் விளையாட தயாராகி இருந்தன.இந்நிலையில் குறித்த போட்டியை அனுமதிக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் மைதானத்தினுள் சென்று செய்தி சேகரிக்க ஏற்பாட்டாளர்களால் விசேட ஏற்பாடுகள் செய்யப்பட்ட அனுமதிக்கப்பட்டிருந்தனர்.இந்நி லையில் தான் குறித்த திருட்டு சந்தேக நபரும் தன்னை ஒரு ஊடகவியலாளர் போன்று உருமாற்றி மைதானத்தினுள் சென்று ஏனைய ஊடகவியலாளர்களுடன் தர்க்கம் புரிந்ததுடன் அவர்களை அச்சுறுத்தும் பாணியில் நடந்து கொண்டிருந்தார்.
இதன்போது குறித்த போட்டியிற்கு அதிதியாக வருகை தந்திருந்த பிரபல ஆடையக உரிமையாளரும் மேற்படி விடயத்தை அவதானித்ததுடன் தனது கடையில் மேற்கொள்ளப்பட்ட திருட்டுடன் சம்பந்தப்பட்ட நபர் என்பதையும் அடையாளம் கண்டு கொண்டார்.உடனடியாக சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு அறிவித்த நிலையில் அங்கு வந்த சாய்ந்தமருது பொலிஸார் சந்தேக நபரை கைது செய்து பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர் குறித்த பிரபல ஆடையகத்தில் பணியாற்றி வந்துள்ளதுடன் ஒரு தொகை பணத்தை வாடிக்கையாளரின் பை;பையில் இருந்து திருடியுள்ளமை ஆரம்ப கட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.இவர் 37 வயது மதிக்கத்தக்க சந்தேக நபர் என்பதுடன் சுமார் 7 மாதங்களாக ஊடகவியலாளர் போன்று நடித்து உருமறைப்பு செய்து தலைமறைவாகி வாழ்ந்து வந்த நிலையில் மைதானத்தினுள் சென்று ஏனைய ஊடகவியலாளர்களுடன் தர்க்கம் புரிந்து அவர்களை அச்சுறுத்தும் பாணியில் நடந்து கொண்டிருந்த நிலையில் கைதானமை சுட்டிக்காட்ட தக்கது.
மேலும் சந்தேக நபரை சட்ட நடவடிக்கைகாக கல்முனை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்த சாய்ந்தமருது பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரபல ஆடையகம் ஒன்றில் கடந்த நோன்பு காலத்தில் திருட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றிருந்தது.குறித்த திருட்டு தொடர்பில் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர் உரிய ஆடையகத்தின் உரிமையாளரின் கவனத்திற்கு கொண்டு வந்ததுடன் பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு அளித்திருந்தார்.
இதற்கமைய பொலிஸாரும் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர்.இந்நிலையில் குறித்த பிரபல ஆடையகத்தில் உடுதுணி கொள்வனவில் ஈடுபட்ட பாதிக்கப்பட்ட குடும்பமும் மற்றுமொரு வழியில் தாங்கள் கொள்வனவு செய்த பொருட்களுக்கான பணத்தினை செலுத்தியிருந்தது.
பின்னர் குறித்த விடயம் தொடர்பில் தனது வாடிக்கையாளருக்கு ஏற்பட்ட களங்கம் தொடர்பில் தனது கடையில் பொருத்தி இருந்த பாதுகாப்பு கமராவினை ஆராய்ந்த உரிமையாளர் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட பணியாளரை இனங்கண்டு கொண்டார்.அத்துடன் பொலிஸாருக்கும் அறிவித்ததுடன் அச்சந்தேக நபரின் பிறந்த இடமான காத்தான்குடி பகுதி மற்றும் சந்தேக நபர் திருமணம் செய்திருந்த அட்டாளைச்சேனை பகுதிக்கும் சென்று பொலிஸார் குறித்த சந்தேக நபரை விசாரித்து தேடியுள்ளனர்.
எனினும் தன்னை கைது செய்ய பொலிஸார் வருவதை அறிந்த குறித்த சந்தேக நபர் தனது அடையாளத்தை உருமறைப்பு செய்து ஊடகவியலாளர் போன்று பாவனை செய்து சுமார் 7 மாதங்களாக தலைமைறைவு வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளார்.
இந்நிலையில் அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மருதமுனை பகுதியில் வெள்ளிக்கிழமை(12) மின்னொளி உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியின் இறுதி போட்டி நடைபெற்றது.இப்போட்டியில் காத்தான்குடி பகுதி விளையாட்டுக்கழகமும் மருதமுனை பகுதி விளையாட்டுக்கழகமும் விளையாட தயாராகி இருந்தன.இந்நிலையில் குறித்த போட்டியை அனுமதிக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் மைதானத்தினுள் சென்று செய்தி சேகரிக்க ஏற்பாட்டாளர்களால் விசேட ஏற்பாடுகள் செய்யப்பட்ட அனுமதிக்கப்பட்டிருந்தனர்.இந்நி

No comments