Column Left

Vettri

Breaking News

77 வருடங்களில் செய்யாத வேலையினை 1 வருடத்தினுள் செய்திருக்கின்றோம்!!




 வி.சுகிர்தகுமார்       

 77 வருடங்களில் செய்யாத வேலையினை 1 வருடத்தினுள் செய்திருக்கின்றோம் என  தேசிய மக்கள் சக்தியின் அம்பாரை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் கரையோர பிரதேசங்களின் ஒருங்கிணைப்பு குழுத் தலைவருமான அபூபக்கர் ஆதம்பாவா கூறினார்.
இதேநேரம் நாட்டை சூறையாடியவர்கள் நாளொரு வண்ணமும் பொழுதொரு மேனியுமாக கைது செய்யப்படுகின்றனர்.
ஜனாதிபதி அவர்கள் சொன்னதை செய்கின்ற தலைவராக மிளிர்ந்து வருகின்றார். அவர் நாட்டு மக்களுக்கு கூறிய உறுதிமொழியினை நிறைவேற்றி வருகின்றார். எதிர்க்கட்சிகள் ஒன்றாக சேர்ந்தாலும் ஆட்சியினை மாற்ற முடியாது. மக்கள் இப்போது எமது அரசாங்கத்தில் முழு நம்பிக்கை வைத்துள்ளனர் எனவும் குறிப்பிட்டார்.

அரசாங்கத்தின் கிராமிய வீதி அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட 6 வீதிகள் கொங்றீட் வீதிகளாக மாற்றம் பெறவுள்ளன.
போக்குவரத்து நெடுஞ்சாலைகள் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சின் ஊடாக அமைக்கப்படவுள்ள வீதிகளுக்கான  வேலைகள் இன்று (13)ஆரம்பித்து வைக்கப்பட்டன.
ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ் தலைமையில் இடம்பெற்ற ஆரம்ப நிகழ்வில் தேசிய மக்கள் சக்தியின் அம்பாரை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் கரையோர பிரதேசங்களின் ஒருங்கிணைப்பு குழுத் தலைவருமான அபூபக்கர் ஆதம்பாவா மற்றும் ஆலையடிவேம்பு பிரதேச தேசிய மக்கள் சக்தியின் இணைப்பாளர் ஆர்.ரதீசன் கலந்து கொண்டு வேலைத்திட்;டத்தினை ஆரம்பித்து வைத்ததன் பின்னர் உரையாற்றுகையில் அவர் இவ்வாறு கூறினார்.

நிகழ்வில் கலந்து கொண்ட அதிதிகளுக்கு மக்கள் பெரும் வரவேற்பளித்தனர்.
இதன் பின்னராக வேலைத்திட்டத்திற்கான பெயர்ப்பலகை பாராளுமன்ற உறுப்பினர் உள்ளிட்டவர்களினால் திரைநீக்கம் செய்து வைக்கப்பட்டது.
தொடர்ந்து வீதிப்புனரமைப்பு வேலைத்திட்டமும் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

No comments