Column Left

Vettri

Breaking News

சுற்றுலாவிகளைக் கவர கல்முனைமாநகரில் தென்னிந்திய உணவகம் திறப்பு !!




( வி.ரி.சகாதேவராஜா)

இலங்கைக்கு வருகை தரும் இந்தியா உள்ளிட்ட சுற்றுலாவிகளையும் உள்ளுர் உணவுப் பிரியர்களையும் கவர கல்முனை மாநகரில் "மாப்பிள்ளை விருந்து" எனும் தென்னிந்திய உணவகம் ஒன்று  நேற்று (7) ஞாயிற்றுக்கிழமை திறந்து வைக்கப்பட்டுள்ளது.

பட்டுக்கோட்டை காமாட்சி உணவகத்தின் மற்றுமொரு உணவகமாக முற்றிலும் தென்னிந்திய சைவ அசைவ உணவுகளை வாழையிலையில் பரிமாறும் குளிரூட்டப்பட்ட உணவகமாக இது திகழ்கிறது.

பிரபல தென்னிந்திய திரை நட்சத்திரம் பாபி சிம்ஹா  திறப்பு விழாவில்  கலந்து கொண்டார்.
முன்னதாக முதல் நாள்(6) சனிக்கிழமை முக்கியஸ்தர்களை அழைத்து முன்னோடி விருந்துபசாரம் வழங்கி வைக்கப்பட்டது.

சொர்ணம் குழுமத்தின் தலைவர் மு.விஸ்வநாதனின் புதல்வர் பிரதீப்-  நிஷாந்தினி தம்பதியினரின் ஏற்பாட்டில் இவ் உணவகம் திறந்து வைக்கப்பட்டமை .


No comments