மல்வத்தை பகுதியில் உயிரிழந்த விவசாயியின் சடலம் மரண விசாரணையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைப்பு!!
பாறுக் ஷிஹான்
இயற்கை உரம் (கோழி எரு) இடுவதற்கு வயலுக்கு சென்ற நிலையில் உயிரிழந்தவரின் சடலம் மரண விசாரணையின் பின்னர் உறவினர்களிடம் ஞாயிற்றுக்கிழமை(7) மாலை ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மல்வத்தை பகுதியில் விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த சம்மாந்துறை மல் ஆறாம் வீதியைச் சேர்ந்த 60 வயது மதிக்கத்தக்க அப்துல் மஜீத் ஞாயிற்றுக்கிழமை(7) உயிரிழந்திருந்தார்.
மல்வத்தை புதுக்காடு பகுதியில் உள்ள காணியில் விவசாயம் செய்து வந்த நிலையில் இயற்கை உரம்(கோழி எரு) இடுவதற்கு அங்கு சென்ற நிலையில் விவசாயிக்கு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்ற நிலையில் இடைநடுவில் அவர் மரணமடைந்திருந்தார்.மரணமடைந்
குறித்த மரணம் தொடர்பில் சம்மாந்துறை பதில் நீதிமன்ற நீதிவானின் உத்தரவிற்கமைய திடீர் மரண விசாரணை அதிகாரி ஏ.எச்.அல் ஜவாஹீர் முன்னெடுத்ததுடன் நெஞ்சு வலி காரணமாக ஏற்பட்ட தாக்கத்தினால் மரணம் சம்பவித்துள்ளதாக குறிப்பிட்டு சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பிலான மேலதிக விசாரணையை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
No comments