Column Left

Vettri

Breaking News

ரணில் விக்கிரமசிங்கவின் தனியார் இல்லத்தை எரித்த சம்பவம் தொடர்பாக அடுத்த கட்ட நடவடிக்கை!!




 காலிமுகத்திடல் போராட்டங்களின் போது முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தனியார் இல்லத்தை எரித்த சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபர்கள் மீது மேலதிக நடவடிக்கைக்கான ஆலோசனைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இது குறித்து சட்ட மாஅதிபர் திணைக்களத்தின் ஆலோசனையைப் பெற கொழும்பு குற்றப்பிரிவுக்கு, கோட்டை நீதவான் பவித்ரா பத்திரண அனுமதி வழங்கியுள்ளார்.

2022 ஜூலை 9 ஆம் திகதியன்று இந்த வீடு எரிப்பு சம்பவம் இடம்பெற்றது. எனினும் குறித்த சம்பவம் தொடர்பாக கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில், நீதிமன்றத்தில் முன்னிலையாகாத இரண்டு சந்தேக நபர்களுக்கு நீதவான் பிடியாணை பிறப்பித்தார்.


அத்துடன் இந்த வழக்கு விசாரணையை 2026 ஜனவரி 14ஆம் திகதிக்கு நீதிவான் ஒத்திவைத்தார்.

No comments