Column Left

Vettri

Breaking News

சம்மாந்துறை பிரதேச சபையின் உள்ளூராட்சி வாரநடமாடும் சேவை! மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் கமல் நெத்மினி பங்கேற்பு!




(வி.ரி.சகாதேவராஜா)

 “வளமான நாடும் - அழகான வாழ்க்கையும்” எனும் தொனிப்பொருளின் கீழான உள்ளூராட்சி வாரத்தினை முன்னிட்டு சம்மாந்துறை பிரதேச சபையின் ஏற்பாட்டில்“மறுமலர்ச்சி நகரம்” எனும் தேசிய வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு தவிசாளர் ஐ.எல்.எம்.மாஹிர் தலைமையில் அப்துல் மஜீட் மண்டபத்தில் நேற்று  (15) திங்கட்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்வில் அம்பாரை மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் எஸ்.எல்.ஏ.கமல் நெத்மினி, சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம்.ஹனீபா, சம்மாந்துறை பிரதேச சபையின் செயலாளர் எம்.ஏ.கே.முஹம்மட்,  பிரதேச சபையின்  உறுப்பினர்கள், திணைக்களங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நடமாடும் சேவையில் சுற்றுச் சூழல், கிராம மட்ட பிரச்சினைகள், தேசிய அடையாள அட்டை, அஸ்வெசும நலன்புரி திட்டம், ஆதன வரி, காணி, கட்டடம், வியாபார அனுமதிப் பத்திரம், முறைப்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்பட்டதோடு, அவைகள் தொடர்பான ஆலோசனைகளும் வழிகாட்டல்களும் வழங்கப்பட்டன.

No comments